)
Rohit Sharma, Virat Kohli: இந்திய அணி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். ஓடிஐ மற்றும் டி20ஐ தொடர்களுக்கான இரு அணிகளின் ஸ்குவாடும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்னும் 10 நாள்களில் ஓடிஐ தொடர் தொடங்குகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ரோஹித் சர்மா கேப்டன்ஸியில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இதுதான் கடைசி ஆஸ்திரேலிய தொடராகவும் இருக்கும். இத்தொடருக்கு பின் உள்நாட்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணியுடன் விளையாட இருக்கிறது.
அப்படியிருக்க, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 ஐசிசி உலகக் கோப்பை வரை இந்திய அணியில் விளையாடுவார்களா என்பதே சந்தேகம்தான். அவர் தற்போதைக்கு சீனியராக, ஓபனிங்கில் ரன்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். விராட் கோலியும் நம்பர் 3இல் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் அவரது யூ-ட்யூப் சேனலில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசியிருக்கிறார். அதில் ரோஹித் சர்மாவின் ஃபார்மை ஓரிரு போட்டிகளை மட்டும் வைத்து எடைப்போடக்கூடாது என்றும் விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
ரோஹித் சர்மா குறித்து கைஃப் பேசுகையில்,"ரோஹித் கேப்டனாக இல்லை, அவர் பல வருடங்களாக விளையாடி வருகிறார். 20 முதல் 30 ரன்கள் வரை அடிப்பார். ஆனால் முக்கிய போட்டிகளில் 80 ரன்களை அடிப்பார். இது ஒரு போட்டியை தனியாக வென்றுகொடுக்கும் இன்னிங்ஸ் ஆகும். மேலும் இப்படிதான் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை இருந்திருக்கிறது. அவருக்கும் கோலிக்கும் உள்ள வித்தியாசமே, கோலி நிலைத்தன்மை உடன் தொடர்ச்சியான ரன்களை கொண்டுவருவார். மறுமுனையில் ரோஹித் சர்மா மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை கொண்டு வருவார். இவர்களை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு மிக கடினமாக இருக்கும்" என்றார்.
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு குறித்து பேசிய அவர், விராட்டின் ஓய்வுக்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார். இதுகுறித்து அவர், "விராட் கோலி போராடிக் கொண்டிருந்தார். அவரது ஓய்வுக்குப் பின்னால் இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்தை அடிப்பது அவரது பலவீனமாக இருந்தது. இது வெளிப்பட்டதால் அவரால் ரன்களை அடிக்க முடியவில்லை. இரண்டாவது, அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட விரும்பினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு கூட செல்ல விளையாட விரும்பினார். ஆனால் அணிக்குள் சில விஷயங்கள் நடந்தன. இது இந்திய அணிக்கு அவர் தேவையில்லை என்பதை அவருக்கு உதவ வைத்தது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ