)
Virat Kohli And Rohit Sharma Availabilty In 2027 CWC: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த அணி இந்திய அணியுடன் சமீபத்தில் டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்திய நிலையில், வரலாற்றை மாற்றி எழுதி உள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இருப்பினும் ஒருநாள் தொடரில் இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
நாளை தொடங்கும் ஒருநாள் தொடர்
டெஸ்ட் தொடர் 14ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி முடிவடைந்த நிலையில், நாளை (நவம்பர் 30) முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க இருக்கிறது. முதல் தொடர் ராஞ்சியில் நாளை நடைபெறுகிறது. இத்தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இவர்கள் 2027 உலகக் கோப்பை வரை இந்திய அணியில் விளையாட விரும்புகின்றனர். ஆனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இருப்பினும் தங்களை ஃபிட்டாக வைத்துக்கொண்டு தங்களது இருப்பை உறுதி செய்ய சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற அவர்கள் ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
மோர்னே மோர்க்கல் பேச்சு
இந்த நிலையில், கோலி மற்றும் ரோகித் தொடர்ந்து ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதில் தடையில்லை என இந்திய அணியின் பவுலிங் கோச் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இருவர்களும் திறமையான வீரர்கள். இருவரும் தொடர்ந்து கடினமாக உழைக்கவும் ஃபிட்டாக இருக்கவும் காத்திருக்கின்றனர். என்னை பொறுத்தவரையில் அனுபவும் மிகவும் பெரியது. அதை நான் நம்புகின்றேன்.
2027 உ.கோ. விளையாட ரோகித், கோலி என்ன செய்ய வேண்டும்
அவர்கள் முக்கிய கோப்பைகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு பெரிய தொடர்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். அவர்களுக்கு எதிராக நான் பந்து வீசி இருக்கிறேன். அப்போது நிறைய தூக்கமற்ற இரவுகளை எதிர்கொண்டுள்ளேன். டெஸ்ட் தொடரில் கடந்த இரண்டு வாரம் எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் வெள்ளை பந்து போட்டியில் நாங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவோம். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் இணைந்துள்ளதால், நாங்கள் இத்தொடரில் விளையாட உற்சாகத்துடன் உள்ளோம். மேலும், உலகக் கோப்பைக்கு இன்னும் நீண்ட தூரம் உள்ளது. எனவே தங்களுடைய ஃபிட்னஸை நிர்வாகிக்கும் வரை அவர்கள் உலகக் கோப்பை பயணத்தில் இருப்பார்கள் என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ