)
Chennai Super Kings, MS Dhoni: ஐபிஎல் தொடரில் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதற்கு முன்னரும் பல அணிகள் விளையாடி உள்ளன. 2008ஆம் ஆண்டு முதல் சீசனில் இருந்து பெரும்பாலான அணிகள் விளையாடி வரும் நிலையில், அவற்றில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளுள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னிலையில் இருக்கும்.
சிஎஸ்கே அணிக்கு தற்போது இந்தளவிற்கு ரசிக படை இருக்கிறது என்றால் அதற்கு அதிமுக்கிய காரணம் ஒருவர்தான், அது தோனி தான் என உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை. இதுவரை நடந்த 18 சீசன்களில் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டதால், சிஎஸ்கே அணி மொத்தம் 16 சீசன்களில் விளையாடி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. 12 முறை பிளே ஆப், 10 முறை இறுதிப்போட்டி என மற்ற எந்த ஐபிஎல் அணிகளுக்கும் இல்லாத பெருமை சிஎஸ்கேவில் இருக்கிறது. இவை அனைத்தும் தோனியின் கேப்டன்ஸியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு தற்போது வயது 44. கடந்த 2020ஆம் ஆண்டிலேயே அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், கடந்த 6 சீசன்களாக தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி உள்ளார். இந்த 6 சீசன்களில் 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். தோனி விளையாடுவதை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், ஐபிஎல் தொடரில் மட்டுமே பார்க்க முடியும் என்பதால், ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்திற்கு படையெடுக்கின்றனர். சேப்பாக்கம் என்றில்லாமல் சிஎஸ்கே விளையாடும் அத்தனை போட்டிகளுக்கும் டிக்கெட் டிமாண்ட் அதிகம் இருக்கிறது.
தற்போது தோனி அடுத்த சீசனிலும் விளையாடப்போகிறார் என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. Uncapped வீரராக தோனி கடந்த மெகா ஏலத்தில் ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். வரும் சீசனிலும் தோனி விளையாடப்போகிறார். இது அவருக்கு கடைசி சீசனாக இருக்க 90% வாய்ப்புள்ளது. இந்த வருடமும் தோனி 14 போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் விளையாடப்போகிறார். அவர் விளையாடுவதை பார்க்க மக்கள் இந்தாண்டு வர தான் போகிறார்கள்.
சூழல் இப்படி இருக்க, முன்னாள் சிஎஸ்கே வீரரான துஷார் தேஷ்பாண்டே, கடந்த 2024ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களிடம் வேடிக்கையாக ஏமாற்றும் வகையில் செய்த சம்பவத்தை தற்போது விவரித்துள்ளார்.
துஷார் தேஷ்பாண்டே கூறுகையில், "நாங்கள் சிஎஸ்கேவில் இருந்தபோது, கேகேஆர் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் விளையாடியபோது, அங்குள்ள ரசிகர் கூட்டம் தோனி பேட்டிங் செய்ய வருவார் என்று எதிர்பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது, நான் டக்அவுட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது, ஜடேஜாவிடம் பேட்டிங் செய்ய வெளியே செல்வது போல் நடிக்கும்படி என்று சொல்லச் சொல்லி என்னிடம் கூறினார்.
நான் ஜடேஜாவிடம் சென்று அதையே சொன்னேன். அப்போது அவரும் களமிறங்குவது போல் சென்று பின்வாங்கினார், தோனி பின்னால் இருந்து நடந்து வந்தார். நான் இந்த முழு காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஜடேஜா வெளியே வந்தபோது, கூட்டம் அமைதியாகிவிட்டது, திடீரென்று தோனி பின்னால் இருந்து வந்து பேட்டிங் செய்ய வெளியே வருவதைப் பார்த்து அரங்கமே உற்சாகத்தில் கூச்சலிட்டது. எனவே அது ஒருவிதத்தில் வேடிக்கையாக இருந்தாலும், Goosebumps-ஐ கொடுத்த தருணமாக இருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.
2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றுவிட்ட துஷார் தேஷ்பாண்டே, சிஎஸ்கே அணிக்காக 2022 முதல் 2024 வரை மூன்றாண்டுகள் விளையாடிய அவர் 31 போட்டிகளில் 39 விக்கெட்டை கைப்பற்றினர். கடந்த 2025 சீசனில் 9 விக்கெட்டை தேஷ்பாண்டே வீழ்த்தியிருக்கிறார், 2021 சீசனில் டெல்லி அணிக்காக விளையாடி தேஷ்பாண்டே, 3 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். மொத்தம் ஐபிஎல் தொடரில் மட்டும் தேஷ்பாண்டே, 46 போட்டிகளில் 51 விக்கெட்டை கைப்பற்றினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ