ICC Hall Of Fame பட்டியலில் தல தோனி! கௌரவப்படுத்திய ஐசிசி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியின் பெயர் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) இடம் பெற்றுள்ளது. மேலும் ஹாசிம் அம்லா, ஸ்மித் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது. 

Written by - RK Spark | Last Updated : Jun 10, 2025, 07:28 AM IST
  • தோனியை கௌரவப்படுத்திய ஐசிசி!
  • ICC Hall Of Fameல் தோனியின் பெயர்.
  • ரசிகர்கள் கொண்டாட்டம்.
ICC Hall Of Fame பட்டியலில் தல தோனி! கௌரவப்படுத்திய ஐசிசி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) இணைந்துள்ளார். அவருடன் இணைந்து மேத்யூ ஹைடன், ஆஸிம் அம்லா, ஸ்மித் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது. திங்கட்கிழமை ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. "இந்திய அணியின் முக்கிய கேப்டன்களில் ஒருவராக இருந்த தோனி சர்வதேச போட்டியில் 17266 ரன்கள் அடித்துள்ளார். விக்கெட் கீப்பிங் மூலம் 829 முறை அவுட் ஆக்கியுள்ளார். 538 சர்வதேச போட்டியில் விளையாடியுள்ள தோனி தனது திறமையும், தனது பிட்னஸையும் நிரூபித்துள்ளார்" என்று ஐசிசி செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | ரோகித் சர்மாவால் பிசிசிஐக்கு ஏற்பட்ட தலைவலி! என்ன செய்யப்போகிறது நிர்வாகம்?

மேலும் இந்த ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ ஹைடன், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆசிம் அம்லா, ஸ்மித், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இவர்களை தவிர இங்கிலாந்து அணியின் சாரா டைலர், பாகிஸ்தானின் சனா மீர் ஆகியோரும் இணைந்துள்ளனர். தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்து ஒரு நாள் உலகக்கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் வென்று கொடுத்துள்ளார். தோனியின் தலைமையில் தான் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார் தோனி.

தோனி பேச்சு

"தலைமுறைகள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் பெயர் இடம்பெற்றிருப்பது ஒரு மரியாதை. இதுபோன்ற எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரையும் நினைவுகூருவது ஒரு அற்புதமான உணர்வு. இது நான் என்றென்றும் போற்றும் ஒன்று," என்று எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார்.

ICC Hall Of Fameல் இணைந்த வீரர்கள்:

தோனி (இந்தியா)
மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா )
டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து)
ஹாசிம் அம்லா (தென்னாப்பிரிக்கா )
கிரீம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா
சனா மிர் ( பாகிஸ்தான் மகளிர் அணி)
சாரா டெய்லர் ( இங்கிலாந்து மகளிர் அணி)

ICC Hall Of Fameல் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள்:

சச்சின் டெண்டுல்கர்
பிஷன் சிங் பேடி
சுனில் கவாஸ்கர்
கபில் தேவ்
வினு மன்கட்
அனில் கும்ப்ளே
ராகுல் டிராவிட்
விரேந்தர் சேவாக்
டயானா எடுல்ஜி ( மகளிர் அணி)
நீத்து டேவிட் ( மகளிர் அணி)
தோனி

மேலும் படிக்க |  Ind ஒருநாள் அணியின் கேப்டன் பதிவியில் இருந்தும் ரோகித் சர்மா நீக்கம்? பிசிசிஐ அதிரடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

About the Author

Trending News