தோனி மீண்டும் கேப்டன்... விலகிய ருதுராஜ் கெய்க்வாட் - சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 10, 2025, 06:53 PM IST
  • காயம் காரணமாக ருதுராஜ் விலகல்
  • தோனி கேப்டனாக நியமனம்
  • ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரர் யார்?
தோனி மீண்டும் கேப்டன்... விலகிய ருதுராஜ் கெய்க்வாட் - சிஎஸ்கே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

CSK Captain MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காயம் காரணமாக அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து, சிஎஸ்கே அணியின் மூத்த வீரரான எம்எஸ் தோனியிடம் கேப்டன்ஸி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

CSK Captain MS Dhoni: தொடர் தோல்வியில் சிஎஸ்கே

சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடி, மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே வெற்றி கண்டது. அதன்பின் ஆர்சிபி, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் என தொடர்ச்சியாக 4 தோல்விகளை சிஎஸ்கே அணி சந்தித்துள்ளது. சேப்பாக்கத்திலும் 2 போட்டிகள் தோற்றுள்ளது.

CSK Captain MS Dhoni: பிளே ஆப் வருமா சிஎஸ்கே? 

இன்னும் 9 லீக் ஆட்டங்களே உள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற குறைந்தது 7 போட்டிகளில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும். தோனியின் கையில் தற்போது மிகப்பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரால் சிஎஸ்கேவை மீண்டும் ஒருமுறை பிளேஆப் சுற்றுக்கு அழைத்துச்செல்ல முடியுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் இடத்தில் உள்ளது.

CSK Captain MS Dhoni: சிஎஸ்கேவுக்கு பின்னடைவு

ஏற்கெனவே பேட்டிங் டாப் ஆர்டர் பிரச்னைக்குரியதாக இருந்துவரும் சூழ்நிலையில், அணியின் ஸ்டார் பேட்டர் ருதுராஜ் கெய்க்வாட் தொடரில் இருந்து விலகியிருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக சிஎஸ்கே அணிக்காக ரன்களை குவித்து வருபவர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

CSK Captain MS Dhoni: ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரர்

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் பிளேயிங் லெவனில் விளையாடப்போவது யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. பெரும்பாலும் ராகுல் திரிபாதிக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். அவர் நம்பர் 3இல் களமிறங்க வாய்ப்புள்ளது. அதன்பின், 14ஆம் தேதி சென்னை அணி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த போட்டிக்குள் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரரை சிஎஸ்கே கொண்டு வரவும் வாய்ப்புள்ளது.

CSK Captain MS Dhoni: என்ன செய்வார் எம்எஸ் தோனி?

சமீபத்தில், உள்தொடர்களில் மும்பை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே, கடந்த சில நாள்களுக்கு முன்னர் சோதனைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஒருவேளை, அணியில் காயம் ஏற்பட்டால் அதுசார்ந்த அறிவிப்புகளை அறிவிப்போம் என சிஎஸ்கேவின் சிஇஓ காசி விஸ்வநாதன் அப்போது தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தோனியின் கேப்டன்ஸியால் சிஎஸ்கேவில் பெரியளவுக்கு மாற்றம் ஏற்படுமா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் வைத்திருக்கும் காம்பினேஷனிலேயே தோனியும் செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது அனைவரின் பார்வையும் நாளைய போட்டியின் மீது குவிந்துள்ளது. 

மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு ஒரே போட்டியில் விழுந்த இரண்டு அடி..! ஆபத்தில் கேப்டன்சி பொறுப்பு..!!

மேலும் படிக்க | இஷாந்த் சர்மாவை பார்த்து அன்னைக்கு பயந்தேன் - விராட் கோலி ஓபன் டாக்

மேலும் படிக்க | அஷ்வானி குமார் to அல்சாரி ஜோசப்: ஐபிஎல்லின் முதல் போட்டியிலேயே அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News