)
IPL 2026: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பயணித்து வருகிறார். 2023ஆம் ஆண்டுக்கு பின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்தி வந்த நிலையில், நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அவர் வெளியேறினார். அதன் பின் மீண்டும் கேப்டன்ஷி பொறுப்பை ஏற்று தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்தினார்.
44 வயதாகிவிட்டது
தோனிக்கு வயதாகிவிட்ட காரணத்தினால், கடந்த சில ஆண்டுகளாகவே ஐபிஎல் தொடரில் இருந்து தோனி எப்போது விலகுகிறார் என்ற கேள்வியும் விவாதமும் நடந்துக்கொண்டே இருக்கிறது. தோனிக்கு தற்போது 44 வயதாகிறது. முட்டி வலி உள்ளதால், அவராலும் முன்பை போல் சிறப்பாக விளையாட முடியவில்லை. 2025 ஐபிஎல் தொடரில், அவர் கடைசி கட்டத்திலேயே பேட்டிங் செய்தார். இதனால் பலரும் அவரால் முடியவில்லை, அவர் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என கூறினர்.
இந்த சூழலில், வரும் 2026 ஐபிஎல் தொடர் தான் அவரது கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. தோனி எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவரது ஐபிஎல் ஓய்வு குறித்தே கேள்விகளும் கேட்கப்படுகிறது. அந்த வகையில், தோனி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், ஓய்வு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, ஒரு வீரராக ஓய்வு பெற்றாலும், சிஎஸ்கே அணியுடனான பந்தம் எப்போதும் தொடரும் என உறுதியாக கூறினார். "நானும் சிஎஸ்கே-வும் இணைந்தே இருப்போம். இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இருப்பேன். அதற்காக அத்தனை ஆண்டுகள் விளையாடுவே என நினைக்க வேண்டும்" என்று அவர் கூறி இருந்தார்.
2026 ஐபிஎல்தான் கடைசி
தோனியின் இந்த பேச்சு ரசிகர்களை ஆறுதல்படுத்தினாலும், அவரது ஓய்வு நெருங்கிவிட்டதை சூசகமாக உணர்த்தியது. அவர் வீரராக இல்லை என்றாலும், ஒரு பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ தொடர்வார் என்பது உறுதியானது. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரே தனது கடைசி சீசனாக இருக்கும் என்று சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தோனி தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 ஆண்டுகள் சிஎஸ்கே-வுடன் பயணம்
எம்.எஸ். தோனி, 2008ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சிஎஸ்கே அணியின் முகமாகவே இருந்து வருகிறார். 2016, 2017ஆம் ஆண்டுகளில் இடைநீக்கம் செய்யப்பட்டபோது மட்டுமே அவர் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். மற்றபடி, அவர் ஐபிஎல்லில் பயணித்த 18 ஆண்டுகளில் 16 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். இதுவரை 264 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர், 5243 ரன்களை அடித்துள்ளார். இதில் 24 அரை சதங்கள் அடங்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ