அடுத்த போட்டியில் ஓய்வை அறிவிக்கும் தோனி? ஃப்ளெமிங் சொன்ன முக்கிய தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியான நிலையில் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Apr 6, 2025, 09:21 AM IST
  • தோனி ஓய்வு பெருகிறாரா?
  • வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.
  • பயிற்சியாளர் சொன்ன தகவல்.
அடுத்த போட்டியில் ஓய்வை அறிவிக்கும் தோனி? ஃப்ளெமிங் சொன்ன முக்கிய தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தோனியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அது என்னுடைய வேலை இல்லை, அவர் எப்போது ஓய்வே அறிவிக்க வேண்டும் என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும், தற்போது வரை ஓய்வு பற்றி எங்களிடம் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுவரை சென்னை அணிக்கு ஐந்து முறை கோப்பையை வாங்கிக் கொடுத்துள்ள தோனி தற்போது ஒரு வீரராக மட்டுமே சென்னை அணியில் விளையாடி வருகிறார். ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அதில் குறிப்பாக சென்னையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிங்க: ஐபிஎல்லில் எம். எஸ். தோனியின் டாப் 5 இன்னிங்ஸ்!

தோனி குறித்து வெளியான வதந்தி

நேற்று சென்னையில் நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை காண தோனியின் குடும்பத்தினர் மைதானத்திற்கு வந்திருந்தனர். தோனி 18 வருடங்களாக ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். ஆனால் அவரது பெற்றோர்கள் மைதானத்தில் வந்து போட்டியை பார்ப்பது இதுவே முதல் முறை. இதனால் தோனி இந்த போட்டியுடன் ஓய்வை அறிவிப்பார் என்று கடந்த இரண்டு நாட்களாக வதந்திகள் பரவியது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இந்நிலையில் இது குறித்து போட்டி முடிந்த பின்பு செய்தியாளர் சந்திப்பில், ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "தோனியின் ஓய்வு குறித்து எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அது என்னுடைய வேலை இல்லை. அதை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் அவருடன் வேலை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன், அவர் இன்னும் வலிமையாக தான் இருக்கிறார். அது பற்றி யாருமே அவரிடம் கேட்பதில்லை. நீங்கள் மட்டும் தான் கேட்கிறீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு நடைபெறும் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும் தோனியின் ஓய்வு குறித்த கேள்விகள் எழுப்பப்படும். 2023 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது கோப்பையை வென்றது, அதன் பிறகு தோனி ஓய்வை அறிவிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஐபிஎல் 2024 தோனி ஒரு வீரராக மட்டும் களமிறங்கினார். தனது கேப்டன்சியை ருதுராஜிடம் ஒப்படைத்தார். தற்போது ஐபிஎல் 2025-ல் "One Last Time" என்ற டீ-சர்ட் அணிந்து சென்னை அணியில் இணைந்தார். மற்ற ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டு மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. ஏலத்தில் எடுக்கப்பட்ட அணி அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது தற்போது நிரூபணம் ஆகி உள்ளது. இன்னும் வரக்கூடிய போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்க்கு செல்ல முடியும்.

மேலும் படிங்க: கடுமையாக சொதப்பிய சென்னை பேட்டர்கள்.. டெல்லி அணி அபார வெற்றி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News