)
Mahendra Singh Dhoni: இந்திய அணியில் இருந்து மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தாலும், அவர் ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், 5 முறை கோப்பையையும் அவரது தலைமையில் வென்று கொடுத்துள்ளார். அதேபோல் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முக்கிய கோப்பைகளை இந்தியவை வழிநடத்தி பெற்றுக்கொடுத்துள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம்
இச்சூழலில், தோனி, 45 வயதை எட்டி உள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அவருக்கு முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக அவர் முழுமையாக பேட்டிங் செய்வதில்லை. நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் கூட அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே களமிறங்கி விளையாடினார். அவரால், முன்பை போல் பெரிய ஷாட்களுக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும், அவர் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்ற நிலை உள்ளது.
முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் எம். எஸ். தோனி ஓய்வு குறித்து பேசி இருந்தார். இன்னும் 5 வருடத்திற்கு கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு அவரது கண் உள்ளதாக மருத்துவர் அறிவுறுத்தியதாகவும் ஆனால், கிரிக்கெட் விளையாடுவதற்கு வெறும் கண் மட்டும் போதாது அல்லவா என ஜாலியாக பேசி இருந்தார். இந்த நிலையில், இன்னும் 15 முதல் 20 வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன் என்றும் அதற்காக 15 முதல் 20 வருடங்களும் தம்மால் களமிறங்கி விளையாட முடியும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் மீண்டும் ஜாலியாக பேசி உள்ளார்.
இன்னும் 15 முதல் 20 வருடம்
இது குறித்து அவர் பேசியதாவது, நானும் சிஎஸ்கேவும் ஒன்றாக இருக்கிறோம். அடுத்த 15 முதல் 20 ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக இருப்போம். அதற்காக நான் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளும் களமிறங்கி விளையாட முடியும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடாது. நான் சிஎஸ்கேவின் மஞ்சள் ஆடையை அணிந்து எப்போதும் அமர்ந்திருப்பேன். களத்திற்கு சென்று விளையாடுவேனா, மாட்டேனா என்பது விரையில் தெரியவரும். ஆனால் சிஎஸ்கே அணியுடன் தொடர்ந்து பயணிப்பேன் என தோனி கூறினார். அதாவது, தோனி ஓய்வு பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தொடர்ந்து பயணிப்பேன். ஒரு ஆலோசகராகவோ அல்லது பயிற்சியாளராகவோ இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ