CSK: 2026இல் தோனி விளையாடுவார்... அவர் தான் கேப்டன் - காரணம் இதுதான்!

MS Dhoni: 2026 ஐபிஎல் சீசனில் தோனி நிச்சயம் சிஎஸ்கேவின் கேப்டனாக தொடர்வார் என கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2025, 06:05 PM IST
  • தோனிக்கு வயது 43 ஆகிறது.
  • தோனி இன்னும் 2 சீசன் விளையாட வாய்ப்புள்ளது.
  • தோனி அடுத்தாண்டு விளையாடுவார் - ரெய்னா
CSK: 2026இல் தோனி விளையாடுவார்... அவர் தான் கேப்டன் - காரணம் இதுதான்!

MS Dhoni: தற்போது 18வது ஐபிஎல் தொடர் (IPL 2025) நடைபெற்று வருகிறது. இதில் 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களை தவிர்த்து மொத்தம் 16 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) விளையாடியிருக்கிறது. நடப்பு சீசனை தவிர்த்தால், 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு வந்துள்ள சிஎஸ்கே 10 முறை இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

இதில் சிஎஸ்கே (CSK) 5 முறை தோல்வியை தழுவியிருந்தாலும், 5 முறை கோப்பையை வென்று அசத்தியிருக்கிறது. 2020, 2022, 2024 ஆகிய மூன்றாண்டுகளில்தான் பிளேஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெறவில்லை. தற்போது 4வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் சிஎஸ்கே வெளியேற 99% வாய்ப்புள்ளது.

MS Dhoni: சிஎஸ்கேவின் சறுக்கும் எழுச்சியும்...

தோனி கேப்டனாக இருந்தபோது சிஎஸ்கே 2020ஆம் ஆண்டு துபாயில் நடந்த தொடரில் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு போகவில்லை. 2021இல் தோனி தலைமையில் கோப்பையை வென்றவுடன் 2022இல் ஜடேஜா பாதி சீசன் வரை கேப்டனாக இருந்தார், அதன்பின் தோனி கேப்டனாக வந்தும் சிஎஸ்கே லீக் சுற்றோடு வெளியேறியது. 2023இல் மீண்டும் தோனி தலைமையில் கோப்பையை வென்றதும் 2024இல் கேப்டன்ஸி ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. 

2024 சீசனில் முழுமையாக ருதுராஜ் கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக 5வது இடத்தோடு சிஎஸ்கே வெளியேறியது. நடப்பு சீசனிலும் ருதுராஜ் பாதியிலேயே காயம் காரணமாக விலக தோனி மீண்டும் கேப்டன்ஸியை பெற்றுள்ளார். இப்போதும் சிஎஸ்கே 9 போட்டிகளில் 2இல் மட்டுமே வென்றிருக்கிறது. அடுத்த 5 போட்டிகளை வென்றாலும் சிஎஸ்கே பிளே ஆப் போவது வாய்ப்பு குறைவுதான்.

MS Dhoni: தோனி 2026இல் விளையாடுவாரா? மாட்டாரா?

இது ஒருபுறம் இருக்க, தோனி அடுத்த வருடம் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது. One Last Time என மோர்ஸ் கோட் டி-சர்ட் அணிந்து சென்னையில் என்ட்ரி கொடுத்திருந்தாலும், தோனி எந்த நேரத்தில் என்ன முடிவெடுப்பார் என்பது யாராலுமே கணிக்கவே முடியாது.

2026 ஐபிஎல் சீசனில் (IPL 2026) தோனி நிச்சயம் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா பேசியிருந்தாலும், அவர் மீண்டும் சாதாரண விக்கெட் கீப்பர் பேட்டராக தொடர்வாரா அல்லது கேப்டனாக தொடர்வாரா என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் பெரும் கேள்வியாக உள்ளது. தோனி ஐபிஎல் தொடரில் விளையாடாவிட்டாலும் கூட பயிற்சியாளராகவோ, ஆலோசகராகவோ அணியில் தொடர்வார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

MS Dhoni: சிஎஸ்கேவுக்கு தோனி பிரச்னையா?

ஆனால், அவரை களத்தில், விக்கெட் கீப்பராக பார்க்கவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சிஎஸ்கே மீது இந்தாண்டே பல விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று தோனி உடனே அணியில் இருந்து வெளியேறி, இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். ஆனால், சிஎஸ்கேவில் தோனி ஒரு பிரச்னையே இல்லை என ஒரு தரப்பு கூறி வருகிறது. 

சிஎஸ்கே என்பது தோனிக்கு மிகவும் சிறப்பான ஒன்றாகும். அவர் சிஎஸ்கேவை அவ்வளவு எளிதில் விட்டுவிட்டுச் செல்ல மாட்டார். அணியை ஒரு நம்பிக்கையானவரின் கையில் ஒப்படைத்த பின்னரே வெளியேறுவார். அவருக்கு கோப்பை வாங்க வேண்டும் என்பதல்ல இலக்கு, நல்ல கிரிக்கெட்டை நோக்கிய செயல்முறையில் (Process) தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பேத நோக்கம்.

MS Dhoni: தோனியின் கம்பேக் பிளான்

ருதுராஜ் அதில் சற்று பின்னடைவை அளிப்பதாக தோனி நினைத்தால் நிச்சயம் அடுத்தாண்டும் சிஎஸ்கேவில் தோனியே கேப்டனாக தொடர்வார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் மற்றொரு நட்சத்திர அந்தஸ்து பெற்ற கேப்டன்ஸியை பார்த்துக்கொள்ளும் வீரரை சிஎஸ்கே தேடத் தொடங்கும். 

ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், டிவால்ட் பிரேவிஸ், அன்ஷூல் கம்போஜ், வன்ஷ் பேடி, நூர் அமகது என உள்ளிட்ட இளம் படையை கொண்டு தோனி, 2026 சீசனில் சிஎஸ்கேவுக்கு முரட்டு கம்பேக் கொடுக்க வைக்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | CSK பிளே ஆப் போக 'மேஜிக்' நடக்கணும்... அதற்கு இந்த 3 வீரர்கள் முக்கியம்

மேலும் படிக்க | மழையால் ரத்தான கேகேஆர் - பஞ்சாப் போட்டி! சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

மேலும் படிக்க | அந்த நான்கு பேர் தான் காரணம்! தோல்வி குறித்து தோனி சொன்ன முக்கிய வார்த்தைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News