MI vs KKR: ஐபிஎல் 2025 தொடரில் இன்று 12வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி பல மாற்றங்களை செய்தது.
MI vs KKR: பிளேயிங் லெவன் மாற்றம்
ராபின் மின்ஸ், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜூ ஆகியோருக்கு பதில் வில் ஜாக்ஸ், விக்னேஷ் புத்தூர், அஷ்வனி குமார் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி களமிறக்கியது. இதில் அஷ்வனி குமாருக்கு இதுவே ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாகும். கொல்கத்தா அணியில் மொயீன் அலிக்கு பதில் சுனில் நரைன் அணிக்குள் வந்தார்.
MI vs KKR: மும்பையின் மிரட்டல் பந்துவீச்சு
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இது மும்பை அணிக்கு பெரிய சாதகமாக அமைந்தது. முதல் ஓவரிலேயே போல்ட் சுனில் நரைனை டக்-அவுட்டாக்கினார். தீபக் சஹார் வீசிய 2வது ஓவரில் டி காக் 1 ரன்னில் வெளியேறினார். 4வது ஓவரை வீசிய அஷ்வனி குமார், ரஹானேவை 11 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். பவர்பிளேவின் கடைசி ஓவரில் தீபக் சஹார், வெங்கடேஷ் ஐயரை 3 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் பவர்பிளே முடிவில் கேகேஆர் 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
MI vs KKR: 116 ரன்களில் சுருண்ட கேகேஆர்
பவர்பிளே முடிந்தும் விக்கெட் வேட்டையை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்தனர். ஹர்திக் பாண்டியா ரகுவன்ஷியை 26 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். ரின்கு சிங் - மனீஷ் பாண்டே ஜோடி 29 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் அஷ்வனி குமார் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கேகேஆர் அணியின் மிடில் ஆர்டரை சரித்தார்.
ரின்கு சிங் 17, மனீஷ் பாண்டே 19, ஆன்ட்ரே ரஸ்ஸல் 5 ரன்களில் அஷ்வனி குமாரிடம் வீழ்ந்தனர். விக்னேஷ் புத்தூர் ஹர்ஷித் ராணாவை 4 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ய, கடைசியாக நம்பிக்கை அளித்து வந்த ரமன்தீப் சிங் சான்ட்னரிடம் வீழ்ந்தார். ரமன்தீப் 12 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 22 ரன்களை அடித்திருந்தார். கேகேஆர் அணி 16.2 ஓவர்களிலேயே 116 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. அஷ்வனி குமார் 4, தீபக் சஹார் 2, போல்ட், ஹர்திக் பாண்டி, விக்னேஷ் புத்தூர், மைக்கெல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
MI vs KKR: மும்பை அணிக்கு மாபெரும் வெற்றி
தொடர்ந்து, 117 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி எளிமையாக அடித்தது. ரியான் ரிக்கல்டன் 41 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 62 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் 9 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் 27 ரன்களை அடித்து ஆட்டத்தை 12.5 ஓவர்களிலேயே முடித்துக்கொடுத்தார். ரோஹித் சர்மா 13, வில் ஜாக்ஸ் 16 சற்று ஏமாற்றம் அளித்தனர். ஆன்ட்ரே ரஸ்ஸல் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வனி குமார் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
Match 12. Mumbai Indians Won by 8 Wicket(s) https://t.co/iEwchzEpDk #MIvKKR #TATAIPL #IPL2025
— IndianPremierLeague (@IPL) March 31, 2025
MI vs KKR: புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவை முந்திய மும்பை
மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 43 பந்துகளையும் மீதம் வைத்தும் வெற்றிபெற்றது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பெரிய நெட் ரன்ரேட்டுடன் பெற்றிருப்பதால் 10வது இடத்தில் இருந்து தற்போது 6வது இடத்திற்கு வந்துள்ளது. சிஎஸ்கே அணி 7வது இடத்தில் உள்ளது. இதையடுத்து தலா 1 வெற்றியுடன் ஹைதராபாத், ராஜஸ்தான், கேகேஆர் அணிகள் முறையே 8வது, 9வது, 10வது இடத்தில் உள்ளன. ஆர்சிபி அணி முதலிடத்தில் நீடிக்கிறது. டெல்லி, லக்னோ, குஜராத், பஞ்சாப் அணிகள் முறையே 2வது, 3வது, 4வது, 5வது இடத்தில் உள்ளன.
மேலும் படிக்க | ஷேன் வார்ன் அறையில் கிடந்த உடலு*றவு மாத்திரைகள்..! வெளியான அதிர்ச்சி பின்னணி..!
மேலும் படிக்க | அஸ்வின் தேவையே இல்லை... இந்த வீரர் வந்தால் சிஎஸ்கேவின் பிரச்னைகள் தீரும்!
மேலும் படிக்க | தோனி முன்பு போல் இல்லை.. உண்மையை உடைத்த ஸ்டீபன் பிளம்மிங்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









