MI vs SRH : மும்பை அபார வெற்றி, சன்ரைசர்ஸ் மீண்டும் தோல்வி - காவ்யா மாறன் ரியாக்ஷன்..!!

Mumbai Indians, Sunrisers Hyderabad : சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்துக்கு முன்னேறியது.  

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 18, 2025, 09:12 AM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி
  • அடுத்தடுத்து சொதப்பிய சன்ரைசர்ஸ் அணி
  • ஐபிஎல் 2025 லேட்டஸ்ட் புள்ளிப் பட்டியல்
MI vs SRH : மும்பை அபார வெற்றி, சன்ரைசர்ஸ் மீண்டும் தோல்வி - காவ்யா மாறன் ரியாக்ஷன்..!!

Mumbai Indians, Sunrisers Hyderabad today IPL match : மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் அணி ஓப்பனிங் பேட்டிங் ஆடி 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்தனைக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கில் பல தவறுகளை செய்தது. தீபக் சாஹர் வீசிய போட்டியின் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இருவரும் கொடுத்த அழகான கேட்சுகளை மும்பை பீல்டர்கள் வில் ஜாக்ஸ் மற்றும் கரண் சர்மா இருவரும் கோட்டை விட்டனர். இருப்பினும் இந்த வாய்ப்புகளை சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

Add Zee News as a Preferred Source

ஹைதராபாத் பிட்ச் பேட்டிங்கிற்கு சொர்க்க பூமியாக இருக்கிறது என்பதால் அந்த பிட்சில் ஆடும் மனநிலையிலேயே சன்ரைசர்ஸ் அணியினர் எல்லா பிட்சுகளிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்கின்றனர். அது அவர்களுக்கு பெரும் பாதகமாக அமைந்து வருகிறது. பிட்சின் நிலையை அறிந்து அதற்கேற்ப பேட்டிங் செய்யாமல் இஷ்டத்துக்கு அதிரடி ஆடுகிறேன் என்ற பெயரில் சீக்கிரம் விக்கெட்டை கொடுப்பதால்  அணிக்கான ஸ்கோர் வருவதில்லை. இஷான் கிஷன் தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வருகிறார். மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். 

பின்வரிசையில் கிளாசன் ஓரளவுக்கு சிறப்பாக ஆட, கடைசி கட்டத்தில் அன்கித் வெர்மா அதிரடியாக காட்டியதால் 162 ரன்களை எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. மும்பை பிட்ச் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்கும்  என்றாலும் முதல் பேட்டிங்கின்போது பந்துவீச்சாளர்களுக்கே உகந்ததாக இருந்தது. அதேநேரதில் மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கும் டாப் கிளாசாக இருந்தது. இதனாலேயே சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களால் ரன்கள் எடுக்க முடியவில்லை.

அதேபோல் பீல்டிங்கின்போதும் சன்ரைசர்ஸ் பிளேயர்கள் பல தவறுகளை செய்தனர். மும்பை பீல்டர்களைப்போலவே சன்ரைசர்ஸ் அணியின் பீல்டிங்கின்போது டிராவிஸ் ஹெட் ஒரு கேட்சை விட்டார். அது மும்பை அணிக்கு அதிர்ஷ்டமாக மாறியது. மும்பை பேட்ஸ்மேன் ரெக்கல்டன் அதிரடியாக ஆடும்போது பாட் கம்மின்ஸ் டைவ் அடித்து ஒரு அற்புதமாக கேட்ச் பிடித்தார். ஆனால் அது நாட்அவுட்டாக அறிவிக்கப்பட்டது. ஏனென்றால், சன்ரைசர்ஸ் விக்கெட் கீப்பர் கிளாசன் ஸ்டம்புக்கு முன்னால் வந்து பந்தை பிடிக்க தயாராக இருந்தார். அது கிரிக்கெட் விதிமுறைப்படி தவறு. அதாவது விக்கெட்  கீப்பர் கைகள் பவுலர் பந்துவீசும்போது ஸ்டம்புக்கு முன்னால் வரக்கூடாது. கிளாசன் செய்த இந்த தவறு சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அவுட் என நினைத்து வெளியே சென்ற ரெக்கல்டன்  மீண்டும் மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டு, பேட்டிங் ஆடினார்.

இது சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஒட்டுமொத்தமாக பேட்டிங் மற்றும் பீல்டிங், பவுலிங்கில் மும்பை அணியை விட அதிக தவறுகளை சன்ரைசர்ஸ் அணி செய்ததால் தோல்வியை தழுவியது. இதனால் 7 போட்டிகளில் மூன்று வெற்றியை பெற்ற மும்பை புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | IPL: அஸ்வினுக்கு அடுத்து நீக்கப்படப்போகும் இந்த 2 பேர்... CSK-வின் சரவெடி பேட்டிங் ஆர்டர்

மேலும் படிக்க | சிஎஸ்கே-வின் பிளே ஆப் கனவுக்கு ஆப்பு? இது அவசியம்.. என்ன செய்யப்போகிறார் தோனி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News