Knee Pain Prevention Tips Tamil | முழங்கால் வலி மட்டும் வந்துவிட்டால் உங்ளால் இயல்பாக நடக்கக்கூட முடியாது. ஊசி குத்துவது போல் உள்ளுக்குள் குத்திக் கொண்டே இருக்கும். அந்தநேரத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் வலி மிகப்பெரிய ரணத்தைக் கொடுக்கும். சிறிய படிக்கட்டுக்கள் கூட ஏற முடியாது. அந்தநேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவது அவசியம். சிறிய தவறு கூட உங்களின் முழங்காலை வெகுவாக பாதிக்க வாய்ப்பு இருக்ககிறது என்பதை நினைவில் வைத்து அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முழங்கால் வலி இருகும்போது செய்ய வேண்டியவை


1. ஓய்வு : உங்கள் முழங்காலுக்கு போதுமான ஓய்வு கொடுப்பது முக்கியம். ஏற்கனவே அசௌகரியத்துடன் இருக்கும் முழங்கால் வலி மேலும் மோசமாகும் வகையிலான செயல்களை செய்யக்கூடாது. அவசியம் இருந்தால், தேவைப்பட்டால், ஊன்றுகோல் அல்லது முழங்கால் பிரேஸ்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


2. ஐஸ் சிகிச்சை: ஐஸ் வலியைக் குறைக்கவும், காயமடைந்த முழங்காலில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு முழங்காலில் ஒரு துணியால் மூடப்பட்ட ஐஸ் கட்டியைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கவும்


மேலும் படிக்க | முடி கருகருன்னு வளர..காபியுடன் ‘இதை’ சேர்த்து தலையில் தடவுங்கள்!


3. கட்டு : முழங்கால் வலி இருக்கும்போது இருக்கமான கட்டு போட்டுக் கொள்வது நல்லது. இது வீக்கத்தை குறைக்கவும், ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்கவும் இந்த கட்டு உதவும். ஆனால், நீங்கள் கட்டும் கட்டு மிகவும் இறுக்கமாக இல்லாமல் இருக்க வேண்டும்.


4. பயிற்சிகள்: முழங்கால் வலியைப் பொறுத்து உடற்பயிற்சி செய்யவும். நீச்சல் அடிக்கலாம், சைக்கிள் ஓட்டலாம். மிதமான வேகத்தில் முழங்காலை நீட்டி மடக்கி பயிற்சி செய்யலாம். 


5. பிஸியோதெரபிஸ்ட் : முழங்கால் ஆரோக்கியத்தை போக்க நிபுணரின் உதவியை நாடுவது நல்லது. அவரின் ஆலோசனையின் அடிப்படையில் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள். இது மேலும் வலி அதிகமாவதை தடுக்கும். 


முழங்கால் வலி இருக்கும்போது செய்யக்கூடாதவை


1. வேலைகளை தவிர்க்கவும்: முழங்கால் வலியை அதிகரிக்கும் வேகமான நடை, ஓடுதல், குதித்தல் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விளையாட்டுகளை விளையாடுதல் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதிக வலி இருக்கும்போது படிக்கட்டுகளில் ஏறுவதைத் தவிர்க்கவும்.


2. காலணிகளை தவிர்க்கவும்: கால்களுக்கும், முழங்காலும்க்கும் அதிக வலிகளை கொடுக்கும் காலணிகளை தவிர்க்க வேண்டும். குஷனிங் மற்றும் ஆர்ச் சப்போர்ட் கொண்ட வசதியான, காலணிகளைத் தேர்வு செய்யவும்.


3. எடை : அதிக எடை இருந்தால் முழங்கால்களின் அழுத்தம் அதிகரிக்கும். இது முழங்கால் மீதான அசௌகரியத்தை அதிகரிக்கும். மேலும், அதிக காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். 


4. நோய் கண்டறிதல்: நீங்களாகவே முழங்கால் வலிக்கு இதுதான் பிரச்சனை என எண்ணிக் கொள்ளவே கூடாது. அதாவது, கீல்வாதம், தசைநார் காயங்கள் போன்றவற்றின் அறிகுறிகள் எல்லாம் பல சமயங்களில் ஒரே மாதிரியாக இருக்கும். அதனால், மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை மருத்துவர்கள் அறிவுறுத்தினால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள். மூட்டு வலி பிரச்சனைகளுக்கு லேசர் அல்லது ரோபோடிக் அறுவை சிகிச்சை எல்லாம் வந்துவிட்டது. இதுகுறித்து முடிவெடுத்து முழங்கால் வலிக்கு முன்கூட்டியே தீர்வு காண முயற்சியுங்கள். 


மேலும் படிக்க | காலை 7 மணிக்கு முன் எழுவதால் ஏற்படும் 7 நல்ல மாற்றங்கள்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ