புது டெல்லி: வெலிங்டனில் இடியுடன் கூடிய மழை காரணமாக IND vs NZ முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. அஜின்கியா ரஹானே(38) மற்றும் ரிஷப் பந்த்(10) ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்திய அணி 55 ஓவருக்கு 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. நாளை தொடர்ந்து இந்திய அணி ஆட உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் ரஹானே (38) நிதானமாக ஆடினார். ஸ்விங்கிங் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் மதிய உணவுக்குப் பிறகு டிம் சவுதி பந்தில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூசிலாந்தைப் பொறுத்தவரை கைல் ஜேமீசன் (Kyle Jamieson) சேதேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் விக்கெட்டுகளை பறித்து பெற்ற நியூசிலாந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்.


டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய அணியை பொறுத்த வரை பிருத்வி ஷாவ் 16(18), மயங்க் அகர்வால் 34(84), சேதேஷ்வர் புஜாராக் 11(42), விராட் கோஹ்லி 2(7) மற்றும் ஹனுமா விஹாரிக் 7(20) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். இப்பொழுது அஜின்கியா ரஹானே* 38(122) மற்றும் ரிஷப் பந்த்* 10(37) ரன்கள் எடுத்து இருவரும் களத்தில் உள்ளனர்.