Weight Loss Journey: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமாக அறியப்படும் பெண் தான் ஜைனப் ஜெய்யேசிமி (Zainab Jaiyesimi) என்பவர் அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார்.
Weight Loss Journey: 95 கிலோ உடல் எடையை குறைத்த பெண்!
Zainylee என்ற அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் 95 கிலோ அளவிற்கு உடல் எடையை குறைத்த தனது முயற்சி குறித்து பதிவு செய்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி ஜைனப் உடல் எடை குறைப்பு முயற்சி குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்றில் Skipping (கயிறு தாண்டுதல்) மூலம் அவருக்கு கிடைத்த பயன்களை குறிப்பிட்டிருந்தது. அவரது உடல் எடை குறைப்பில் கயிறு தாண்டுதல் அதிக தாக்கத்தை கொடுத்ததாகவும், கயிறு தாண்டுதல் அவருக்கு கொண்டாடும்படி இருந்ததாகவும் கூறுகிறார். அவரது உடைகளின் சைஸில் பெரியளவு மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது. முன்னர் 28 சைஸ் உடைகளை அணிந்து வந்த அவர், தற்போது 18/16 சைஸ் உடைகளை தான் அணிகிறாராம். அந்தளவிற்கு உடல் எடை குறைந்துள்ளது.
Weight Loss Journey: ஜிம்முக்கே செல்லவில்லை... ஸ்கிப்பிங் மட்டுமே...
மேலும் அவர் கூறுகையில், "கயிறு தாண்டுதல் மற்றும் நடைபயிற்சி தான் எனது முதன்மையான உடற்பயிற்சிகள், நான் இதை மற்றவர்களுக்கும் நிச்சயம் பரிந்துரைப்பேன். நான் வீட்டிலேயே இருந்து Skipping செய்து, இப்போது எந்தளவிற்கு வந்திருக்கிறேன் பாருங்க..." என்கிறார். குறைந்த கலோரிகளை உட்கொள்வதும், நன்றாக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதும் உடல் எடையை குறைக்க உதவும் என்ற டிப்ஸையும் பகிர்கிறார் ஜைனப்.
500 முறை தினமும் கயிறு தாண்டுதலின் மூலம் வீட்டிலேயே இருந்து எடையைக் குறைக்க முடியும் என்று ஜைனப் கூறுகிறார். மேலும், "நான் ஸ்கிப்பிங் செய்வதை மிகவும் ரசிக்கிறேன். நான் ஜிம்மிற்கே செல்ல வேண்டியதில்லை. ஸ்கிப்பிங் செய்வதை 100 சதவிகிதம் பரிந்துரைக்கிறேன். ஆனால் உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை மறந்துவிடாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
Weight Loss Journey: ஜைனப்பின் உடல் எடை குறைப்பு பயணம்
ஜைனப் ஜெய்யேசிமி மேலும் தனது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பேசுகையில், "கயிறு தாண்டுவதின் மூலம் கிடைக்கும் பலம்... கயிறு தாண்டுதல் ஒரு மேஜிக் போல வேலை செய்கிறது. ஸ்கிப்பிங் செய்வது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நான் முதலில் தொடங்கும்போது, ஒவ்வொரு முறை குதிப்பதும் ஒரு போராட்டமாக உணர்ந்தேன். ஆனால் நான் தொடர்ந்து சென்றேன். படிப்படியாக நான் முன்னேறினேன். திரும்பிப் பார்க்கும்போது, நான் எவ்வளவு தூரம் வந்துள்ளேன் என்பதை நினைக்கையில் எனது எடை இழப்பு பயண வீடியோக்கள் என்னை மகிழ்ச்சியடையச் செய்கின்றன" என்றார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஜைனப் ஜெய்யேசிமி என்பவரின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை நீங்கள் பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | உடல் எடையை குறைத்த அர்னால்ட் மகன்... 2 மாதங்களில் 13 கிலோவை குறைந்ததாம் - அது எப்படி?
மேலும் படிக்க | 138 கிலோவில் இருந்த இளம்பெண்... 75 கிலோ உடல் எடையை குறைக்க அவர் செய்தவை என்ன?
மேலும் படிக்க | தொப்பை போட்ட ரித்திகா சிங்... 3 மாதங்களில் வெறித்தனமாக வெயிட் லாஸ் செய்தது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ