இனி டெஸ்ட் போட்டிகள் 5 நாள்கள் இல்லை... ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!

Cricket News In Tamil: டெஸ்ட் போட்டிகள் மீதான சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த இனி டெஸ்ட் போட்டிகளை 4 நாள்களில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2025, 08:38 PM IST
  • தற்போதும் 4 நாள்கள் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
  • ஆனால், WTC சுழற்சியில் இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
  • தற்போது இதையும் கணக்கில் எடுக்க ஐசிசி திட்டமிட்டிருக்கிறது.
இனி டெஸ்ட் போட்டிகள் 5 நாள்கள் இல்லை... ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!

Cricket News In Tamil: 2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி கடந்த ஜூன் 13ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இன்று முதல் தொடங்கிய 2025-27 WTC சுழற்சி... 

அதைத் தொடர்ந்து, தற்போது 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் சுழற்சி இன்று (ஜூன் 17) முதல் தொடங்கியது. இலங்கையில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன, இந்த தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த மாதத்தில் இங்கிலாந்து - இந்தியா தொடர் (5 டெஸ்ட் போட்டிகள்), மேற்கு இந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா தொடர் (2 போட்டிகள்) உள்ளிட்டவை தொடங்குகின்றன.

டெஸ்ட் மீதான சுவாரஸ்யத்தை அதிகரிக்க...

டெஸ்ட் போட்டிகளுக்கு மக்கள் மத்தியிலான ஆர்வத்தை அதிகரிக்க ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மேலும் டெஸ்ட் மீதான சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த போட்டி நாள்களை 5இல் இருந்து குறைத்து 4 ஆக குறைக்க முடிவெடுத்துள்ளது. அதாவது, 2027-29 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட் போட்டிகளை 4 நாள்கள் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

4 நாள்கள் டெஸ்ட் போட்டி

5 நாள்களில் இருந்து 4 நாள்களாக குறைப்பதன் மூலம் சிறிய நாடுகள் அதிக போட்டிகளையும், தொடர்களையும் விளையாட முன்வருவார்கள் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் வழக்கம்போல் டெஸ்ட் போட்டிகளை 5 நாள்களுக்கு விளையாடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து இங்கிலாந்தின் The Guardian செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலின்படி, "கடந்த வாரம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த கலந்துரையாடல்களின் போது, ​​ஐசிசி தலைவர் ஜெய் ஷா, 2027-29 WTC சுழற்சிக்கு முன்னதாக நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை அனுமதிக்கும் நோக்கில், அதற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது" என தெரிய வருகிறது.

இதனால் ஏற்படும் நன்மை என்ன?

இப்போதும் சில நாடுகள் 4 நாள்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. இருதரப்பு தொடர்களில் மட்டும் 4 நாள்கள் விளையாடலாம். 2017ஆம் ஆண்டு ஐசிசி இதற்கு ஒப்புதல் அளித்திருந்தது. இங்கிலாந்து அணி கடந்த 2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் அயர்லாந்து அணியுடனும், கடந்த மே மாதம் ஜிம்பாப்வே அணியுடனும் 4 நாள்கள் டெஸ்ட் போட்டியை விளையாடியது. 

ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற பல சிறிய நாடுகள் டெஸ்ட் அட்டவணையில் இருந்து விலகி நேரம் மற்றும் செலவு காரணமாக டெஸ்ட் போட்டிகளை விளையாட தயக்கம் காட்டுகின்றன. ஆனால் நான்கு நாள் கிரிக்கெட்டுக்கு மாறுவது மூன்று வாரங்களுக்குள் மூன்று டெஸ்ட் தொடரையும் முழுமையாக விளையாட வாய்ப்பளிக்கும் எனலாம். சிறிய நாடுகளின் ரசிகர்களும் டெஸ்ட் போட்டிகளை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.

2025-27 சுழற்சியில் 27 தொடர்கள்

அதே நேரத்தில் 5 நாள்கள் டெஸ்ட் போட்டியில், ஒரு நாள் ஆட்டம் குறைந்தபட்சம் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். அதே நேரத்தில், 4 நாள்கள் டெஸ்ட் போட்டியில் ஒரு ஆட்டம் குறைந்தபட்சம் 98 ஓவர்கள் வீசப்பட வேண்டும். இந்த மாற்றம் 2027-29 WTC சுழற்சியில் ஏற்படுத்தவே வாய்ப்புள்ளது, 2025-27 சுழற்சி வழக்கம்போல் நடைபெறும். இன்று தொடங்கியிருக்கும் 2025-27 சுழற்சியில் 9 அணிகள் 27 டெஸ்ட் தொடர்களில் மோதுகின்றன. இவற்றில் 17 இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களும், 6 மூன்று போட்டிகள் கொண்ட தொடர்களும் அடக்கம்.

மேலும் படிக்க | பும்ரா கிடையாது... நம்பர் 3இல் இந்த வீரர்... இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவிற்கு வந்தால் இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்! யார் தெரியுமா?

மேலும் படிக்க | பயிற்சி ஆட்டத்தில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்! மாற்று வீரர்கள் இவர்கள் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News