இந்திய அணியில் அடுத்த விராட் கோலி இவர் தான்...! சுப்மான் கில் இல்லை...!

Team India: இந்திய அணியில் அடுத்த விராட் கோலி யார் என்ற கேள்விக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் அளித்த பதிலை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 9, 2025, 08:06 PM IST
  • இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.
  • வரும் ஜூன் 20ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
  • சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணியில் அடுத்த விராட் கோலி இவர் தான்...! சுப்மான் கில் இல்லை...!

India National Cricket Team: இந்தியா - இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விளையாடுகிறது. பட்டோடி கோப்பை என்ற பெயர் மாற்றப்பட்டு இந்த தொடரில் இருந்து ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடர் என்ற பெயரில் விளையாடப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

Team India: இந்தியாவும், இங்கிலாந்தும்... பல ஆண்டுகளுக்கு பின்...

சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புதிய சுழற்சியை இந்த தொடரின் மூலம் தொடங்குகின்றன. இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் இல்லாமல், ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாமல் இந்திய அணி பல ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து மண்ணில் விளையாட உள்ளது.

அதேபோல், விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் இல்லாமல் இங்கிலாந்து அணியும் இந்திய அணியை எதிர்கொள்கிறது. ஜடேஜாவே இந்திய அணியின் சீனியர் வீரராக திகழ்கிறார். கேஎல் ராகுல், கருண் நாயர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் முன்னின்று சுப்மான் கில்லின் தலைமைக்கு உதவி, இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும்.

Team India: அடுத்த விராட் கோலி யார்?

இது ஒருபுறம் இருக்க, இந்திய அணி டெஸ்ட் அணியில் விராட் கோலியின் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. விராட் கோலிக்கு பின் சுப்மான் கில் என கூறப்பட்டாலும் அவர் விராட் கோலி அளவிற்கு பேட்டிங்கில் தனித்திறன் பெற்றிருக்கிறாரா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. கிங் கோலி, இளவரசர் கில் என கூறப்பட்டாலும் ரசிகர்களிடத்திலும் சில கேள்விகள் இருக்கின்றன. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த திறன் இருக்கிறது என்றாலும் கோலி அளவுக்கு இருக்கிறதா...? என்பதே பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது.

Team India: கவனத்தை ஈர்க்கும் சாய் சுதர்சன்

அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மாண்டி பனேசர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் சாய் சுதர்சன் தான் என்றும் விராட் கோலியின் இடத்தை பிடிக்கப்போவதும் அவர்தான் என்றும் கூறியுள்ளார். பனேசர் சாய் சுதர்சன் விளையாடுவதை மிக நெருக்கத்தில் இருந்து கவனித்து வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

சாய் சுதர்சன் இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார். அந்த 2 ஆண்டுகளுக்கும் அவர் அங்கு சிறப்பான திறனை வெளிக்காட்டினார். அவரது பேட்டிங் நுட்பமும், மனோதிடமும் பாராட்டத்தக்கது. இங்கிலாந்தில் தனது திறனை சிறப்பாக வெளிக்காட்டுவது அவ்வளவு எளிதல்ல. சுதர்சன் அதனை சிறப்பாக செய்திருக்கிறார்.

Team India: சாய் சுதர்சன் தான் அடுத்த விராட் கோலி... 

பனேசர் சாய் சுதர்சன் குறித்து கூறுகையில்,"இந்திய அணியில் தற்போது பல நல்ல இளம் வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சாய் சுதர்சனை கூறலாம். ஆக்ரோஷத்துடனும், பயமின்றியும் அவர் இருக்கிறார். இங்கிலாந்து சூழலில் சர்ரே அணிக்காக அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான் என்றும் விராட் கோலியின் நம்பர் 4 இடமும் அவருக்கானதுதான்" என்றும் அவர் பேசி உள்ளார். 

மேலும் அவர், "விராட் கோலி பின்பற்றிய அந்த மரபை இந்திய வீரர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புகிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிய விதத்தில், இளம் இந்திய டெஸ்ட் வீரர்களும் விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார்.

மேலும் படிக்க | ரோகித்தை விட விராட் பல மடங்கு உயர்ந்தவர்.. சஞ்சய் மஞ்சுரேக்கர்!

மேலும் படிக்க | ஷ்ரேயாஸ் ஐயரை மனதார நினைத்து... அவருடன் குடும்பம் நடத்தி வருகிறேன் - நடிகை பகீர்!

மேலும் படிக்க | ரிஷப் பண்டுக்கு காயம்... இந்திய அணிக்கு பெரிய அப்செட்... ஆனால் இந்த வீரருக்கு சூப்பர் வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News