பாகிஸ்தானிடம் இருக்கும் சிக்கல் இதுதான்.. இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

Pakistan should learn from india: 2026 டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி தக்கவைத்துள்ளது. இதற்கு பல பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.   

Written by - R Balaji | Last Updated : Mar 9, 2026, 09:28 PM IST
  • 2026 டி20 உலகக் கோப்பை தொடர் மார்ச் 8 முடிவடைந்தது
  • இந்திய அணி கோப்பையை தக்கவைத்துள்ளது
  • பாகிஸ்தான் வீரர்கள் பாராட்டி பேசி இருக்கின்றனர்
பாகிஸ்தானிடம் இருக்கும் சிக்கல் இதுதான்.. இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் மார்ச் 08ஆம் தேதி முடிவடைந்தது. இத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு மாபெரும் வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் இந்த வெற்றியை பாகிஸ்தான் வீரர் பலரும் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், சிலர் இந்தியாவின் வெற்றியை கண்டு புலம்பி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் வீரர் முகமது வாசிம், இந்தியாவை விட பாகிஸ்தான் அணி பின்தங்கி இருப்பதை முதலில் அணி நிர்வாகம் ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

இனி இந்தியா மீது பழிபோட கூடாது 

இது தொடர்பாக அவர் பேசுகையில், பாகிஸ்தான் இந்திய அணியிடம் தோற்கும்போதோ அல்லது பெரிய தொடர்களில் அவர்கள் சிறப்பாக விளையாடும்போதோ,இந்திய அணியிடம் குறைகளை கண்டுபிடிக்கவே முற்படுகிறோம். இனி அதை செய்யக்கூடாது. அதனை நிறுத்த வேண்டும். இந்திய அணி தலைசிறந்த அணி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முகமது வாசிம் கூறி உள்ளார். 

இந்திய அணியில் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது 

இந்திய அணியின் வெற்றிகள் குறித்து முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஜாவேத் மியாண்டட் பேசுகையில், இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் 250 ரன்களை கடந்து மிரட்டி இருக்கிறது. இது போன்ற எந்த அணியும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் தகுதியாகும். இந்திய அணி கிரிக்கெட் கட்டமைப்பை சிறப்பாக வைத்திருக்கிறது. அதற்கு சான்று அவர்களது பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் என ஜாவேத் மியாண்டட் பாராட்டி உள்ளார். 

பாகிஸ்தான் அணியில் சிக்கல் உள்ளது 

முன்னாள் வீரர் ரஷித் லத்தீப், ஒரு அணி பெரிய தொடர்களில் தொடர்ந்து இறுதி போட்டிகளுக்கு முன்னேறும் போது, அந்த அணி வீரர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற நுனுக்கம் தெரிந்திருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள வேண்டும் என்று அறிந்திருப்பார்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு காரணம். ஆனால் பாகிஸ்தான் அணி அப்படி இல்லை. அவர்கள் அடிக்கடி மாற்றம் செய்கின்றனர். அதனாலேயே அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகின்றன என தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். 

பொதுவாக இந்திய அணியிடம் இருந்து குறைகளை பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள் குறைகளை கண்டுபிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இம்முறை சிலர் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்தும் பாராட்டியும் பேசி இருக்கின்றனர். மேலும், அவர்கள் இந்திய அணியை சுட்டிக்காட்டி அவர்களிடம் இருந்து பாகிஸ்தான் அணி நிர்வகம் மற்றும் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர். 

டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி 

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. குரூப் சுற்றில் இந்தியாவை தவிர்த்து மற்ற அணிகளுடன் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறது. பின்னர் அச்சுற்றில் முன்று போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பெற்றது. மீதமுள்ள இரண்டில் ஒரு போட்டி மழையால் ரத்தானது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இதன் காரணமாக அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: கிரிக்கெட்டை ஆளும் இந்தியா... 2 வருடத்தில் 6 ஐசிசி கோப்பைகள் - என்னென்ன தெரியுமா?

மேலும் படிக்க: இந்திய அணிக்கு அடிச்சது லக்... எகிறிய பரிசுத்தொகை... காரணம் டிரம்ப் - ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News