வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை முடித்துவிட்டு தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் விளையாட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பங்கேற்க இருக்கின்றனர். இதனால் டி20 தொடரை விட ஒருநாள் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில், விராட் கோலி, ரோகித் சர்மாவை பார்க்க இது ஒரு கடைசி வாய்ப்பு என்றும் இந்த ஒருநாள் தொடரை காயம் காரணமாக தவறவிட்டது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஏமாற்றம் என்றும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டார் சேனலில் பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாடி உள்ளார்கள். எனவே அவர்களை ஆஸ்திரேலியாவில் மக்கள் பார்க்க இதுவே கடைசி வாய்ப்பாக அமையலாம். அவர்கள் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் சாம்பியன்களாக இருந்துள்ளனர். நாங்கள் அவர்களுடன் விளையாடும்போது ரசிகர்களின் ஆராவாரம் அதிகமாக இருக்கும்.
அப்படிப்பட்ட இந்தியாவுக்கு எதிரான தொடரை நான் தவறவிடுகிறேன். இது எனக்கு ஒரு அவமானம் என நினைக்கிறேன். இத்தொடருக்காக ஏற்கனவே எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருப்பதால், இம்முறை ரசிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன். இது போன்ற பெரிய தொடரை நீங்கள் தவறவிடும்போது, மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். இவ்வாறு பேட் கம்மின்ஸ் பேசினார்.
ஒருநாள் தொடருக்கான இரு அணிகள்
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.
மேலும் படிக்க: 2027 உலகக் கோப்பையில் கோலி, ரோகித்துக்கு வாய்ப்பு இருக்கா? கம்பீர் சூசக பதில்!
மேலும் படிக்க: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: இரண்டு முக்கிய வீரர்கள் விலகல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









