ஆர்சிபிக்கு ஹேப்பி நியூஸ்.. அணிக்கு திரும்பிய அதிரடி மன்னன்!

Phil Salt: இறுதி போட்டியில் ஃபில் சால்ட் விளையாட மாட்டார் என கூறி வந்த நிலையில், தற்போது அவர் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jun 3, 2025, 06:30 PM IST
ஆர்சிபிக்கு ஹேப்பி நியூஸ்.. அணிக்கு திரும்பிய அதிரடி மன்னன்!

IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதி போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இறுதி போட்டிக்கு ஆர்சிபி அணி நான்காவது முறையாக முன்னேறி உள்ளது. தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1ல் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

Add Zee News as a Preferred Source

இச்சூழலில் பஞ்சாப் அணியை மீண்டும் இறுதி போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி. குவாலிஃபையர் 1ல் தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில் ஆர்சிபி அணி தான் வெல்லும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிகளுக்கு இத்தொடரில் ஃபில் சால்ட் ஒரு முக்கிய காரணம். அவரது அதிரடியான ஆட்டம் பல போட்டிகளில் ஆர்சிபிக்கு கைக்கொடுத்துள்ளது. 12 போட்டிகளில் விளையாடிய அவர், 387 ரன்களை குவித்துள்ளார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 175 ஆக உள்ளது. 

குவாலிஃபையர் 1 சுற்றுக்கு பின்னர் தனது மனைவி பிரசவம் என்பதால், சொந்த நாட்டுக்கு திரும்பி இருந்தார். நேற்று நடைபெற்ற பயிற்சியிலும் அவர் இல்லை. இதனால் ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்படும் என ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், அனைவருக்கும் மகிழ்ச்சி செய்தியாக ஃபில் சால்ட் மீண்டும் ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். 

இன்று இறுது போட்டி நடைபெற இருக்கும் நிலையில், அதிகாலை 3 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் ஃபில் சால்ட் வந்து இறங்கு அணியில் சேர்ந்துள்ளார். இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எக்ஸ் தளத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு, மேஜையில் சால்ட் இல்லை என்று யாராவது சொன்னார்களா? என பதிவிட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில் அவர் மீண்டும் அணியில் இணைந்திருப்பது தெரிகிறது. மேலும், கடந்த போட்டிகளில் விளையாடாத டிம் டேவிட்டும் அணியில் இணைந்துள்ளார். அவரும் இறுதி போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிங்க: அதிர்ச்சியில் RCB! இந்த வீரர் பைனலில் விளையாட மாட்டார்? - டிம் டேவிட்டும் சந்தேகம்

மேலும் படிங்க: மழையால் இறுதிப்போட்டி ரத்தானால்... ஆர்சிபிக்கு கோப்பை கிடையாது - ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News