பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் அணிக்கு முதல் வெற்றி - இன்று யார் யாருக்கு இடையே மோதல்?

PPL Season 2: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் தொடரில் ஊசுடு அக்கார்ட்ஸ் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், காரைக்கால் நைட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 10, 2025, 07:06 AM IST
  • ஜூலை 6ஆம் தேதி இத்தொடர் தொடங்கியது.
  • மொத்தம் 6 அணிகள் இதில் மோதுகின்றன.
  • ஜூலை 27ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: காரைக்கால் நைட்ஸ் அணிக்கு முதல் வெற்றி - இன்று யார் யாருக்கு இடையே மோதல்?

Pondicherry Premier League Season 2: பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன் சீகெம் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு ஒரு லீக் போட்டி, மாலை 6 மணிக்கு போட்டி என 2 லீக் போட்டிகள் தினமும் நடைபெற்ற வரும் நிலையில், நேற்று (ஜூலை 9) மாலை 6 மணியளவில் இத்தொடரின் 7ஆவது லீக் போட்டி தொடங்கியது.

Add Zee News as a Preferred Source

PPL Season 2: முதல் வெற்றிக்கு போட்டாப்போட்டி

இந்த லீக் போட்டியில், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின. இரண்டு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் தோல்வியடைந்து இருந்ததால், முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது. போட்டியில் டாஸ் வென்ற காரைக்கால் நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

PPL Season 2: 167 ரன்கள் இலக்கு

காரைக்கால் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக அங்கீத் சர்மா 49 ரன்களையும், அமன் கான் 37 ரன்களையும், கவுதம் திலீப் 31 ரன்களையும் பதிவு செய்தனர். பந்துவீச்சை பொருத்தவரை ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி தரப்பில் சாத்விக் தேஸ்வால் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.

PPL Season 2: சொதப்பிய ஊசுடு அணியின் பந்துவீச்சு

இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியில், ராஜசேகர் ரெட்டி 2, ஜஷ்வந்த் ஸ்ரீராம் 22, கார்த்திகேயன் ஜெயசுந்தரம் 7, சிதக் சிங் 3, சைலேஷ் வைத்தியநாதன் 3, தாமரை கண்ணன் 1 என அடுத்தடுத்து வெளியேறினர். மறுபக்கம் நிதின் பிரணவ் தனியாக போராடினார். அவரும் 18 பந்துகளில் 33 ரன்கள் அதிரடியாக அடித்து ஆட்டமிழந்தார்.

PPL Season 2: ஆட்டநாயகன் அங்கீத் சர்மா 

இறுதியாக ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், காரைக்கால் நைட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷஃபிக்குதீன் 16 பந்துகளில் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார். பந்துவீச்சில் காரைக்கால் தரப்பில் விஜய் ராஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட்டிங்கில் 49 ரன்களும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அங்கீத் சர்மா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். முன்னதாக நேற்று மதியம் நடைபெற்ற லீக் போட்டியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரூபி ஒயிட் டவுன் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.

PPL Season 2: இன்றைய லீக் போட்டிகள்

பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கில் இன்றும் 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் - ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. அதேபோல, மாலை 6 மணிக்கு நடைபெறும் போட்டியில், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும் - காரைக்கால் நைட்ஸ் அணியும் மோத உள்ளன. இப்போட்டியை பாண்டிச்சேரி சீகெம் மைதானத்தில் நீங்கள் நேரில் சென்று இலவசமாகவே கண்டுகளிக்கலாம். Star Sports Khel சேனலில் தொலைக்காட்சியிலும், Fancode ஓடிடி தளத்திலும் நீங்கள் நேரலையில் காணலாம்.

மேலும் படிக்க | சச்சின், கோலி இல்லை... லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த இந்தியர்களின் லிஸ்ட்!

மேலும் படிக்க | "என்னிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்".. ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் எதிர் புகார்!

மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில்... டிரேட் செய்யப்பட்ட இந்த 10 முக்கிய வீரர்கள் - இது உங்களுக்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News