வைபவ் சூர்யவன்ஷியை கட்டி பிடிச்சேனா? ப்ரீத்தி ஜிந்தா கோபம்!

வைபவ் சூர்யவன்ஷியை பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா கட்டி அனைத்து பாராட்டியதாக புகைப்படங்கள் வைரலான நிலையில், அது மார்ப் செய்யப்பட்ட புகைப்படம் என கோபமாக ப்ரீத்தி ஜிந்தா பதிவிட்டுள்ளார். 

Written by - R Balaji | Last Updated : May 21, 2025, 02:07 PM IST
  • வைபவ் சூர்யவன்ஷி ப்ரீத்தி ஜிந்தா வைரல் புகைப்படம்
  • ப்ரீத்தி ஜிந்தா கோபமாக பதிவு
வைபவ் சூர்யவன்ஷியை கட்டி பிடிச்சேனா? ப்ரீத்தி ஜிந்தா கோபம்!

2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமானவர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயதே ஆன இவர், அதிரடியாக விளையாடி உலகையே திரும்பி பார்க்க செய்தார். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வீரராக அறிமுகமானவர் என்ற சாதனையை தாண்டி, குஜ்ராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்தும் சாதனை படைத்தார். 

நேற்றைய போட்டியில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்களை விளாசினார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய இவர் 252 ரன்களை குவித்துள்ளார். சிக்சர் மட்டுமே 24 அடித்துள்ளார். இவரது அதிரடியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இளம் வயதில் இவருக்கு இப்படி ஒரு பவரா என அனைவரிடம் இருந்து வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா வைபவ் சூர்யவன்ஷியை கட்டி அனைத்ததாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அது மார்ப் செய்யப்பட்டது என கோபமாக ப்ரீத்தி ஜிந்தா பதிவி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மே 18ஆம் தேதி மோதின. அப்போட்டி முடிந்தவுடன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா அனைத்து வீரர்களையும் சந்தித்து கைகுலுக்கினார். அப்போது சூர்யவன்ஷியையும் சந்தித்தார். அவருடன் சிறுதி நேரம் பேசவும் செய்தார். இது அதிகாரப்பூர்வமாக பஞ்சாப் கிங்ஸ் சமூக வலைதள பக்கத்திலும் வெளியானது. 

ஆனால், அந்த வீடியோவில் எந்த இடத்திலும் ப்ரீத்தி ஜிந்தா வைபவ் சூர்யவன்ஷியை கட்டி அணைக்கவில்லை. இருப்பினும் அது போன்ற சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது உண்மையான புகைப்படம் என பலரும் பகிர்ந்தும் வந்தனர். இந்த நிலையில், அதனை பார்த்த ப்ரீத்தி ஜிந்தா அது போலியான புகைப்படம் என மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள பதிவில், இது மார்ப் செய்யப்பட்ட புகைப்படம். மேலும், இது பொய்யான செய்தி. தற்போது இந்த செய்தி சேனல்களிலும் மார்ப் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாவது ஆச்சரியத்தை தருகிறது என கூறி உள்ளார்.  

மேலும் படிங்க: எங்களுக்கு அந்த ஒரு வீரர் வேண்டும் - தோனி சொன்னது யாரை தெரியுமா?

மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News