கொல்கத்தாவை சுருட்டிய பஞ்சாப்.. 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 

Written by - R Balaji | Last Updated : Apr 16, 2025, 05:55 AM IST
  • ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் மோதின
  • இதில் பஞ்சாப் அணி 16 ரன்களில் அபார வெற்றி பெற்றது
கொல்கத்தாவை சுருட்டிய பஞ்சாப்.. 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொடரின் 31வது போட்டி இன்று (ஏப்ரல் 15) சண்டிகர் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. 

Add Zee News as a Preferred Source

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினர். பிரியான்ஸ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் 0, ஜோஸ் இங்கிலிஸ் 2, மேக்ஸ்வெல் 7, வதேரா 10, பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா சார்பாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களையும், நரைன் மற்றும் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்களையும் நார்கியா மற்றும் வைபவ் அரோரா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 112 ரன்கள் எடுத்தா வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினார். 

தொடக்க வீரர்களான டி காக் மற்றும் நரைன் முறையே 2 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ரஹானே மற்றும் ரகுவன்சி சிறிது நேரம் களத்தில் தாக்குப்பிடித்து அணிக்கு ரன்களை சேர்க்க தொடங்கிய நேரத்தில் ரஹானே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரகுவன்சியும் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்களை சரித்தது பஞ்சாப் அணி. 

இறுதியில், 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் சஹால் அதிகபட்சமாக 4 விக்கெட்களையும் மார்கோ யான்சன் 3 விக்கெட்களையும் எடுத்தனர். சிறிய டார்கெட் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என நினைத்த நிலையில், அந்த மனநிலையை உடைத்து பஞ்சாப் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

மேலும் படிங்க: தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் - முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News