ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசன் அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை. காரணம் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிரான தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது ராஜஸ்தான் அணி. கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இம்பேக்ட் ப்ளேயர் ஆக மட்டுமே விளையாடி வருகிறார்.
மேலும் படிங்க: இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்
கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டனாக ரியான் பராக் தான் உள்ளார். மேலும் சில போட்டிகளிலும் அவரே கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தங்களது முதல் போட்டியில் மோசமான பவுலிங் காரணமாக தோல்வி அடைந்தது ராஜஸ்தான். 20 ஓவரில் கிட்டத்தட்ட 286 ரன்கள் அடிக்க விட்டனர். சேஸிங்கில் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரேல் சிறப்பாக விளையாடினாலும் 44 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 151 ரன்கள் மட்டுமே அடித்தது. குவின்டன் டி காக்கின் சிறப்பான ஆட்டத்தினால் கொல்கத்தா அணி எளிதான வெற்றியை பெற்றது.
One brings the magic
One brings the lightning
The combo we Yellove! #WhistlePodu #Yellove pic.twitter.com/UNu9R1Oj1a— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2025
சென்னை சூப்பர் கிங்ஸ்
மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டி சிறப்பாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் நூர் அகமது சிறப்பாக பந்துவீசி சென்னை அணியின் வெற்றிக்கு உதவினார். அதன் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது சென்னை. 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இரண்டு அணிகளும் தோல்வியை சந்தித்து வருவதால் இந்த போட்டி விறுவிறுப்பாக மாறி உள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் தான் காரணமாக அமைந்தது. இதனால் ராகுல் திருப்பாதி, தீபக் ஹூடா மற்றும் சாம் கரண் ஆகியோருக்கு பதிலாக வேறு சில வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த மாற்றங்களை செய்தால் சென்னை அணி இன்றைய போட்டியில் எளிதாக வெற்றி பெறலாம்.
மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









