இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் வரும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனை கணித்துள்ளார்.
இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தொடக்க வீரராக ஜெஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் இருப்பார்கள். ஏனென்றால், ராகுலுக்கு இது ஒரு முக்கியமான சுற்றுப்பயணம் என நான் நினைக்கிறேன். அவர் அனுபவம் மிக்கவர். கடந்த முறை இந்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் தொடக்க வீரராக களம் இறங்கி ஒரு சதம் அடித்திருந்தார். எனவே அவர் தொடக்க வீரராக விளையாடுவார் என நான் நம்புகிறேன்.
மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சனை தேர்வு செய்வேன். இந்த சுற்றுப்பயணம் அவருக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும். நான்காவது வீரராக கில் மற்றும் 5வது வீரராக கருண் நாயர் களம் இறங்கலாம். அவர் இந்தியாவுக்காக விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அவர் கடுமையான உழைப்பிற்கு பின் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின்போது அவரை சந்தித்து பேசினேன். கதவை தட்டுவது மட்டும் போதாது, அதை உதைத்து உள்ளே நுழைந்து அணியில் இடம் பிடி என கூறினேன். அவர் அதை செய்துவிட்டார். 6வது இடத்தில் ரிஷப் பண்ட் களம் இறங்குவார். வேகப்பந்து வீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா அல்லது அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா என அவர் கூறினார்.
ரவி சாஸ்திரி பிளேயிங் 11: ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), கருண் நாயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா அல்லது அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
மேலும் படிங்க: 2026 டி20 மகளிர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. எப்போது, எங்கே நடக்கிறது?
மேலும் படிங்க: என்னால் தான் இந்த விஷயம் அணியில் நடந்தது - உண்மையை சொன்ன பும்ரா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ