)
Ravichandran Ashwin About Mohammed Shami Rejection: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் இருந்தே இந்திய அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வருகிறார். அத்தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை மேற்கொண்ட அவர், அத்தொடருக்கு பின்னர் 2024 இங்கிலாந்து தொடர் ஒன்றில் விளையாடினார். இதையடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பிடித்து விளையாடிய ஷமி, அதன் பின்னர் இந்திய அணியில் இடம் பெறவே இல்லை. காயம் காரணமாக அடிக்கடி பாதிப்பை சந்தித்தலாம் இந்திய அணியும் அவரை ஓரம்கட்டி வருகிறது.
தொடர்ந்து நிராகரிக்கப்படும் முகமது ஷமி
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இடம் பிடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இடம் பெறவில்லை. அவருக்கு உடல்தகுதி முன்னேற்றம் தேவை என்று தேர்வுக்குழுவால் கூறப்பட்டது. பின்னர் தொடர்ச்சியாக முகமது ஷமி ரஞ்சி கோப்பையில் விளையாடி வந்தார். வெறும் 2 போட்டிகளில் 15 விக்கெட்களை வீழ்த்தி அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடிப்பார் என பேசப்பட்டது. ஆனால் அந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம்
இந்த நிலையில், வர இருக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை நேற்று (நவம்பர் 05) பிசிசிஐ அறிவித்தது. இந்த தொடரிலும் முகமது ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதால், முகமது ஷமியின் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஷமி இந்திய அணியில் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசி இருக்கிறார்.
ரஞ்சி டிராபியில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவரால் களத்தில் எவ்வளவு நேரம் பீல்டு செய்கிறார் என்பது தெரிய வேண்டும். ஏனென்றால், டெஸ்ட் போட்டியில் நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 ஓவர்கள் பந்து வீச்ச வேண்டும். அது அவரால் முடியுமா? அதுமட்டுமல்லாமல் அவரால் நாள் முழுக்க பீல்டிங் நிற்க முடியுமா? போன்ற விஷயங்களை நாம் தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும். உடற்தகுதியானது முழுமையாக இருந்தால்தான் அவரை இந்திய அணி தேர்வு செய்யும்.
பந்து வீசும் போது, அடிக்கடி டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று மீண்டும் வந்து பந்து வீசினால் அவரை இந்திய அணி தேர்வு செய்யாது. முழு உடற்தகுதியுடன் நாள் முழுவதும் களத்தில் நிற்கும் பட்சத்திலேயே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அகாஷ் தீப்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ