)
AB De Villiers All Time IPL PLaying 11: மைதானத்தின் அனைத்தும் பக்கமும் பந்தை சிதறடிப்பதால் 360 என அன்பாக அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிரடி வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடினார். தொடக்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 2011ஆம் ஆண்டில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக (RCB) விளையாடி வந்தார்.
இவர் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில், 5162 ரன்கள் குவித்துள்ளார். 3 சதம் மற்றும் 40 அரைசதங்கள் இதில் அடங்கும். ஆர்சிபி அணிக்காக சுமார் 11 ஆண்டுகள் விளையாடிய ஏபிடி, கோப்பையை வெல்லாமல் வெளியேறியது மிகப்பெரிய வருத்தமே. ஆனால் கோப்பையை வெல்லும் ஆர்சிபி அணியை பார்க்க நடந்து முடிந்த 2025 ஐபிஎல் இறுதி போட்டிக்கு மைதானத்திற்கு வந்து ஆர்சிபி வீரர்களுடன் கோப்பை வென்றதை கொண்டாடினார்.
ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆல்டைம் IPL பிளேயிங் லெவன்
இந்த நிலையில், ஏ.பி. டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய வீரர்களை வைத்து ஆல்டைம் பிளேயிங் லெவனை வெளியிட்டிருக்கிறார். இத்தொகுப்பில் ஏ.பி. டிவில்லியர்ஸ் வெளியிட்டிருக்கும் 11 வீரர்கள் யார் என்பதையே இங்கு பார்க்க இருக்கிறோம். தொடக்க வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹைடனை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து விராட் கோலி, நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் ஏ.பி. டி வில்லியர்ஸ் தன்னை தானே தேர்வு செய்துள்ளார். பின்னர் 6வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, 7வது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம். எஸ். தோனி மற்றும் இவரை அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, லாசித் மலிங்கா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் டேனியல் வெட்டோரியை அவர் தேர்வு செய்துள்ளார்.
AB De Villiers All Time IPL PLaying 11: ரோகித் சர்மா, மேத்யூ ஹைடன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஏ.பி. டி வில்லியர்ஸ், ஹர்திக் பாண்டியா, எம். எஸ். தோனி(விக்கெட் கீப்பர் & கேப்டன்) , ஜஸ்பிரித் பும்ரா, லாசித் மலிங்கா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் டேனியல் வெட்டோரி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ