RCB vs CSK : சிஎஸ்கே அணியிடம் அடி வாங்குவதே ஆர்சிபி-க்கு வேலையா போச்சு..! ஹிஸ்டரிய பாருங்க ஆர்சிபி ஃபேன்ஸ்

RCB vs CSK : சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 17 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை என்ற மோசமான வரலாற்றை இன்று மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Mar 28, 2025, 02:44 PM IST
  • இன்றைய ஐபிஎல் போட்டி
  • சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்
  • சிஎஸ்கே வெற்றி பெற வாய்ப்பு
RCB vs CSK : சிஎஸ்கே அணியிடம் அடி வாங்குவதே ஆர்சிபி-க்கு வேலையா போச்சு..! ஹிஸ்டரிய பாருங்க ஆர்சிபி ஃபேன்ஸ்

RCB vs CSK Head to Head : ஐபிஎல் 2025 தொடரின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 2வது வெற்றியை தீர்மானிக்கும் போக போட்டியாக சேப்பாக்கத்தில் நடக்கும் இன்றைய மோதல் இருக்கப்போகிறது. அதேநேரத்தில் ஆர்சிபி அணிக்கு ஒரு மிகப்பெரிய வரலாற்று சோதனை துரத்திக் கொண்டிருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

ஏனென்றால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அந்த அணி வீழ்த்தி 17 ஆண்டுகள் ஆகிறது. ஆம், ஐபிஎல் தொடங்கிய முதல் ஆண்டில் ஒரு போட்டியில் இந்த மைதானத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன்பிறகு நடந்த எஞ்சிய 8 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாகை சூடியிருக்கிறது. இப்படியொரு மோசமான சாதனைக்கு ஆர்சிபி இன்றாவது முற்றுப்புள்ளி வைக்குமா? என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கும் இடையே மொத்தம் 33 போட்டிகள் இதுவரை நடந்துள்ளன, அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதிலும் சிஎஸ்கே அணியே முன்னிலையில் இருக்கிறது. ஆனால் ஆர்சிபி அணிக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கையளிக்கும் விஷயம் என்னவென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடந்த கடைசி போட்டியில் ஆர்சிபி அணியே வெற்றி வாகை சூடியது. அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்தது. அந்த நம்பிக்கையோடு இன்று விராட் கோலி படை தோனி படையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியுடன் உள்ளது. இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும். குறிப்பாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். 

மேலும் படிக்க | CSK vs RCB: இந்த 2 வீரர்கள் நீக்கம்! சென்னை அணியில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம்!

மேலும் படிக்க | CSK vs RCB : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றி பெறும்! ஆர்சிபி வீக் பாயிண்ட் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News