)
IPL 2026 RCB Won 2nd Championship : ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை தக்கவைத்துள்ளது. 17 ஆண்டுகளாக கோப்பைக்காக தவம் இருந்த ஆர்சிபி அணி, ரஜத் பட்டிதர் தலைமையில் 2025, 2026 என தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வென்றுள்ளது.
இதற்கு முன் 2010, 2011 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ்; 2019, 2020 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. அதன் வரிசையில் ஆர்சிபி அணியும் தற்போது இணைந்துள்ளது. குறிப்பாக, தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் வரிசையில் ரஜத் பட்டிதார் இணைந்திருக்கிறார் எனலாம்.
Finishing off i
— IndianPremierLeague (@IPL) May 31, 2026
And it's none other than K
Scorecardhttps://t.co/Yz6K3q6w0X#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/FZNGQ26gBs
இன்று (மே 31) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 155 ரன்களையே அடித்தது. வாஷிங்டன் சுந்தர் மட்டுமே போராடி 37 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். ரஷிக் சலா 3 விக்கெட், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் 2 விக்கெட், குர்னால் பாண்டியா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய ஆர்சிபிக்கு விராட் கோலி கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். அவர் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர் உடன் 75 ரன்களை குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 178.57 ஆகும். வெங்கடேஷ் ஐயர் 16 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 32 ரன்களை அடித்ததும் ஆர்சிபி வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது. இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார். அதிக பவுண்டரி, அதிக சிக்ஸர்களையும் அவரே அடித்திருந்தார். அதிக டாட் பந்துகளை புவனேஷ்வர் குமார் வீழ்த்தியிருந்தார்.
இதில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி மட்டும் 5 விருதுகளை வென்றிருக்கிறார். பரிசுத் தொகை மட்டும் ரூ.45 லட்சம், மேலும் டாடா கார் ஒன்றையும் அவர் வென்றுள்ளார்.
சிறந்த ஆடுகளம் மற்றும் மைதானம் (5 போட்டிகளுக்கு மேல்): வங்காள கிரிக்கெட் வாரியம் (கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ்) - ரூ.50 லட்சம்
சிறந்த ஆடுகளம் மற்றும் மைதானம் (5 போட்டிகளுக்கு குறைவாக): ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் வாரியம் (தரம்சாலா மைதானம்) - ரூ.25 லட்சம்