IPL 2026 Mini Auction, Cameron Green: அபுதாபியில் உள்ள Ethihad அரங்கத்தில் வரும் செவ்வாய்கிழமை (டிசம்பர் 16) அன்று ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் நடைபெற இருக்கிறது. 1390 வீரர்கள் ஐபிஎல் ஏலத்திற்கு பதிவு செய்த நிலையில், 350 வீரர்கள் மட்டுமே ஏலம்விடப்பட இருக்கிறார்கள்.
IPL 2026 Mini Auction: எகிறிய டிமாண்ட்
10 அணிகளால் மொத்தமாக தேர்வாகிய இந்த 350 வீரர்களில் 224 Uncapped இந்திய வீரர்கள், 16 Capped இந்திய வீரர்கள், 96 Capped வெளிநாட்டு வீரர்கள், 14 Uncapped வீரர்கள் ஆவர். இவர்களில் 31 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 77 வீரர்களை மட்டுமே 10 அணிகளும் ஏலம் எடுக்க முடியும். அதிலும், ஆன்ட்ரே ரஸ்ஸல், கிளென் மேக்ஸ்வெல், பாப் டூ பிளெசிஸ், மொயின் அலி உள்ளிட்டோர் ஏலத்தில் பதிவு செய்யாதது வீரர்களுக்கான டிமாண்டை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களான கேம்ரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டன், அகேல் ஹோசைன், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோருக்கான மவுஸ் அதிகரித்திருக்கிறது.
Cameron Green: சிஎஸ்கே vs கேகேஆர்
அதிலும் கேம்ரூன் கிரீன் குறைந்தபட்சம் ரூ.20 கோடியாவது ஏலம் போக வாய்ப்புள்ளது. கேகேஆர் மற்றும் சிஎஸ்கே இடையேதான் கேம்ரூன் கிரீனுக்கு அதிக போட்டி இருக்கும். ஒருவேளை சிஎஸ்கே கேம்ரூன் கிரீனை குறைந்தபட்சம் ரூ.20 கோடிக்கு எடுத்தாலும் ரூ.23.4 கோடி கையில் இருக்கும். ஓரிரு முன்னணி வீரர்களை அணியில் எடுத்தாலே போதுமானதாகிவிடும்.
மாறாக கேம்ரூன் கிரீனை கேகேஆர் குறைந்தபட்சம் ரூ.20 கோடிக்கு எடுத்தால், அதன் பர்ஸ் தொகை சிஎஸ்கே அளவிற்கு (ரூ. 44.3 கோடி) குறைந்துவிடும். கேகேஆர் அணி மீண்டும் பதிரானா, வெங்கடேஷ் ஐயரை எடுக்க நினைத்தால் இன்னும் பெரிய அடி விழும். எனவே, சிஎஸ்கேவால் ஓரளவுக்கு குறைந்த தொகையில் ஜேசன் ஹோல்டரையும், லியம் லிவிங்ஸ்டனையும் பெற முடியும். ஜேக்கப் டஃப்பி, மேட் ஹென்றி போன்ற வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை கூட எடுத்துக்கொள்ளலாம்.
Cameron Green: கேம்ரூன் கிரீன் பந்துவீச மாட்டாரா?
எனவே, சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணியின் தலையெழுத்து கேம்ரூன் கிரீன் கையில்தான் இருக்கிறது. அதுவும் கேம்ரூன் கிரீன் முதல் செட்டான பேட்டர்கள் செட்டிலேயே வந்துவிடுவார். இரு அணிகளும் பெரியளவுக்கு வீரர்களை வாங்கியிருக்காது என்பதால், அதிக தொகையை வைத்திருக்கும் கேகேஆர் அணிக்கே இதன் சாதகம் கிடைக்கும். ஆனால் கேம்ரூன் கிரீன் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்தான். இப்போது கூட ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசி வருவதை பார்க்க முடியும். ஆனால் தற்போது பேட்டர்கள் செட்டில் இருப்பதன் மூலம் அவர் இனி பந்துவீச மாட்டாரோ என்ற சந்தேகம் எழுந்தது. பந்துவீசாத கேம்ரூன் கிரீனை எதற்கு ரூ.20 கோடிக்கு மேல் பணம் கொடுத்து எடுக்க வேண்டும் என சிஎஸ்கே, கேகேஆர் யோசிக்கலாம் என கூறப்பட்டது.
Cameron Green: கேம்ரூன் கிரீன் சொன்ன அதிர்ச்சி தகவல்
ஆனால், தன்னால் பந்துவீச இயலும் என்றும் தனது மேலாளரின் தவறால் மினி ஏளத்தில் தனது பெயர் பேட்டர்கள் செட்டில் வந்துவிட்டது என்றும் கேம்ரூன் கிரீன் விளக்கம் அளித்துள்ளார். கேம்ரூன் கிரீன் கூறுகையில், "நான் நன்றாக பந்து வீசுவேன். எனது மேலாளர் இதைக் கேட்க விரும்புகிறாரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் பக்கத்தில் ஏதோ குழப்பம் இருந்துள்ளது. அவர் 'பேட்டர்' என்று சொல்ல நினைக்கவில்லை, அவர் தவறுதலாக தவறானதை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எல்லாம் எப்படி மாறியிருக்கிறது என்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனால் அது உண்மையில் அவரது பக்கத்தில் நடந்த குழப்பம்தான்" என்றார்.
Cameron Green: மொத்தமாக மாறிவிட்ட சூழல்
இதன்மூலம், சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் கூட, ஒருவேளை கேம்ரூன் கிரீன் இரண்டாவது செட்டான ஆல்-ரவுண்டர் செட்டில் (AL-1) வந்திருந்தால் பல விஷயங்கள் மாறியிருக்கும், குறிப்பாக அவரது ஏலத்தொகை கூட குறைந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், டேவிட் மில்லர் முந்தைய பேட்டர் செட்டில் (BA-1) வருவார். இரண்டாவது செட்டில் (AL-1) லியம் லிவிங்ஸ்டன், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் இருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் மூவருக்கு பின் கேம்ரூன் கிரீன் ஏலத்திற்கு வந்தால் கேகேஆர் அல்லது சிஎஸ்கே அணியில், ஒரு அணி ரூ.20 கோடி வரை போகாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கான ஏலத்தொகை குறைந்திருக்கும். அவரது மேனேஜர் செய்த தவறால் அனைத்தும் தற்போது மாறியிருக்கிறது.
மேலும் படிக்க | CSK அணிக்கு இந்த 2 வீரர்கள் தேவையில்லை.. அதுக்கு பதிலா இவரை எடுத்தா நல்லா இருக்கும்!
மேலும் படிக்க | முன்னாள் CSK வீரருக்கு பெரிய ஆப்பு... ஐபிஎல் ஏலத்தில் அப்போ ஏலம் போக மாட்டாரா...!?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









