Chennai Super Kings: ஐபிஎல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் அதிக முறை கோப்பையை வென்ற அணி மட்டுமின்றி, அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். மும்பை இந்தியன்ஸ் அணி 10 முறை பிளே ஆப் வந்துள்ளது, சிஎஸ்கே 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கிறது.
அதிலும் சிஎஸ்கே 2016 மற்றும் 2017 ஆகிய தொடர்களில் விளையாடவில்லை. இதுவரை 15 சீசன்களில் 2020, 2022, 2024 என மூன்று முறை மட்டுமே பிளேஆப் தொடருக்கு சிஎஸ்கே தகுதிபெற்றதில்லை. அதிலும் முதல் 10 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற வந்திருக்கிறது. இந்த சிறப்பு மற்ற அணிகளுக்கு இல்லை. சிஎஸ்கேவுக்கு இத்தகைய சிறப்பு இருப்பதற்கு அவர்கள் சேப்பாக்கத்தில் அதிக வெற்றிகளை குவிப்பதே முக்கிய காரணமாக இருந்துள்ளது.
Chennai Super Kings: சிஎஸ்கேவின் வெற்றியும்... சோப்பாக்கம் மைதானமும்...
2020, 2022 ஆகிய இரண்டு சீசன்களிலும் சேப்பாக்கத்தில் விளையாடுவதற்கு என தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்குவாட், சேப்பாக்கத்தில் விளையாடாமல் போனது. இதனாலேயே அவர்கள் அந்த தொடர்களில் பிளே ஆப் சீசனுக்கு போகவில்லை. 2024 சீசன் கேப்டன்ஸி மாற்றம் என்பது வேறு கதை. அதாவது, சிஎஸ்கே அதன் ஹோம் மைதானத்தில் அதிக வெற்றிகளை பெறுவதே அவர்கள் பிளே ஆப் போவதற்கும், இத்தகைய வெற்றிகரமாக திகழ்வதற்கு முக்கியமாக இருக்கிறது என்பது புரிகிறது, இதனால்தான் சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டையாக அறியப்படுகிறது. மேலும் சிஎஸ்கே கோப்பையை வென்ற ஆண்டுகள் முழுவதும் ஓபனிங் காம்பினேஷன் மிரட்டலாக இருந்திருக்கிறது.
Chennai Super Kings: சேப்பாக்கத்திற்காக எடுக்கப்பட்ட வீரர்கள்
அந்த வகையில் இந்தாண்டு சேப்பாக்கத்தில் வெற்றி பெற திணறுவதும், ஓபனிங் மிக மிக மோசமாக இருப்பதும்தான் சிஎஸ்கே அணியின் பெரிய பிரச்னையாக உள்ளது. அதாவது, சேப்பாக்கம் மைதானத்திற்கு என தேர்வு செய்யப்பட்ட அத்தனை வீரர்களும் மோசமான பார்மில் இருக்கின்றனர். ஏலத்தில் சேப்பாக்கத்தில் சிறப்பாக செயல்படுவதற்கு ஏற்ற, சுழற்பந்துவீச்சை பந்தாடக்கூடியவர்களாக அறியப்பட்ட ராகுல் திரிபாதி, தீப்க் ஹூடா, விஜய் சங்கர் ஆகிய இந்திய பேட்டர்கள் எடுக்கப்பட்டனர்.
Chennai Super Kings: சுழற்பந்துவீச்சு சோப்பிக்காதது ஏன்?
ஜடேஜா ரூ.18 கோடி, நூர் அகமது ரூ.10 கோடி, அஸ்வின் ரூ.9.75 கோடி என ரூ.37.75 கோடியை சுழற்பந்துவீச்சில் சிஎஸ்கே முதலீடு செய்திருக்கிறது. அப்படியிருந்தும், ருதுராஜ் கெய்க்வாட்டால் இந்த 3 சுழற்பந்துவீச்சாளர்களுக்கு முழுமையாக 12 ஓவர்களை ஒதுக்க முடியவில்லை. இந்த மூவரும் சேர்ந்து நேற்றைய டெல்லிக்கு எதிரான போட்டியில் 8 ஓவர்களையே வீசினர். அப்படியென்றால் சேப்பாக்கம் மைதானம் அதன் பாரம்பரியமாக அறியப்படும் சுழற்பந்துவீச்சுக்கு கைக்கொடுப்பதில்லையா, அப்படி கைக்கொடுக்காதபட்சத்தில் எதற்கு 3 ஸ்பின்னர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Chennai Super Kings: பேட்டர்களிடம் ஆக்ரோஷம் இல்லாதது ஏன்?
டெல்லி அணியில் கூட அக்சர் பட்டேல் நேற்று ஓவரையே வீசினார். குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகாம் ஆகியோர் முழுமையாக 8 ஓவரை வீசி 57 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். சுழற்பந்துவீச்சை பந்தாட தானே வீரர்களை தேர்வு செய்தீர்கள், அவர்கள் ஏன் ஆக்ரோஷமாக விளையாடுவதில்லை என்றும் சிலர் தங்களின் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
Chennai Super Kings: சிஎஸ்கேவுக்கு வந்த பிரச்னை
இந்நிலையில், இதுகுறித்து ஜி தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு பேட்டியளித்த கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் அளித்த பிரத்யேக தகவலின்படி, பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளத்தை மட்டுமே அமைக்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் வந்த அழுத்தமே சிஎஸ்கேவுக்கு பெரிய பிரச்னையாக வந்துள்ளதாக கூறினார்.
Chennai Super Kings: பிசிசிஐ சொன்ன அந்த விஷயம்
இதுகுறித்து அவர் கூறுகையில்,"இது நிறைய பேருக்கு தெரியாத விஷயம். நான் சிஎஸ்கே நிர்வாகி ஒருவரிடம் பேசியதன் மூலம் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன். சிஎஸ்கே அணி அதிக ஸ்பின் ஆகும் ஆடுகளத்தையே அமைக்க திட்டமிட்டிருந்தது. அதன்படி மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டிக்கும் ஆடுகளம் அப்படியே அமைக்கப்பட்டது, பேட்டிங் செய்வதற்கு அவ்வளவு எளிதாக அந்த ஆடுகளம் அமைக்கப்படவில்லை.
ஆனால், முதல் போட்டிக்கு பிறகு பிசிசிஐ தரப்பில் இருந்து சிஎஸ்கேவுக்கு ஒரு அறிவுறுத்தல் வந்தது. 'இனி மைதானத்தை ஆய்வு செய்ய எங்கள் தரப்பில் இருந்துதான் ஆட்கள் வருவார்கள். ஆடுகளத்தை இப்படி அமைக்காமல், பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும், அப்போதுதான் பார்வையாளர்களுக்கு பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்' என பிசிசிஐ தரப்பில் கூறியுள்ளனர்.
Chennai Super Kings: முதல் போட்டிக்கு பின்... சிஎஸ்கேவுக்கு பின்னடைவு
நம்ம சுழற்பந்துவீச்சு ஆடுகளத்திற்கு சாதகமாக நல்ல சுழற்பந்துவீச்சாளர்களை எடுத்திருந்தோம். ஆனால், பேட்டிங் ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் அறிவுறுத்தல் சிஎஸ்கேவை கட்டிப்போட்டுவிட்டது. இதனால், என்ன செய்வதென தெரியாமல் சிஎஸ்கே பின்னடைவை சந்தித்திருக்கிறது.
இப்போது இருக்கும் ஆடுகளத்திற்கு சாதகமாக அணி எடுக்கவில்லை. அதனால்தான் பிரச்னை" என்றார். மேலும் வீரர்கள் பயிற்சி போட்டிகளையும் நன்கு ஸ்பின் ஆகும் ஆடுகளத்திலேயே விளையாடி பயிற்சிபெற்றுவிட்டதால், தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளத்தில் மெதுவாக விளையாடி தடுமாறுகிறார்கள் என்றும் தகவல் அளித்தார்.
மேலும் படிக்க | எனக்கு பிடித்த கிரிக்கெட் பிளேயர்கள்... முதன்முறையாக பட்டியல் போட்ட எம்எஸ் தோனி..!
மேலும் படிக்க | அடுத்த போட்டியில் சென்னை அணியில் நீக்கப்பட வேண்டிய 5 வீரர்கள்!
மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன்கள் - யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









