Rinku Singh: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிடம் ரூ.5 கோடி கோரி தாவூத் இப்ராஹீம் தலைமையிலான கும்பல் மிரட்டுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளிவந்துள்ளன. இதனை தொடர்ந்து, இவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரசிகர் என கூறி மிரட்டல்
நவீத் என்ற நபர் முதலில் ரிங்கு சிங்கிடம் ரசிகர் என்ற முறையில் அறிமுகமாகி, தனது குடும்பம் பண நெருக்கடியில் இருப்பதாக கூறி உதவி கேட்டுள்ளார். பின்னர் அதைப் பயன்படுத்தி திரும்ப திரும்ப பணம் கோர ஆரம்பித்து இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு அவரது தொனி மாறி இருக்கிறது.
முதலில் சாதாரணமாக தொடங்கிய உரையாடல், பின்னர் மிரட்டல் வடிவம் கொண்டதாகவும், தனக்கு பணம் மறுத்தால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற மிரட்டி இருக்கிறார். மேலும், தனக்கு தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் ஏப்ரம் மாதமே நடந்துள்ளதாக தெரிகிறது. தற்போதுதான் இது தொடர்பான விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருவர் கைது
இந்த விவகாரம் தொடர்பாக ரிங்கு சிங் கடந்த ஏப்ரல் மாதத்தில் போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், முகமது இல்சான் மற்றும் நவீத் என்ற இருவர் வெஸ்ட் இண்டீசில் கைது செய்யப்பட்டனர். இவர்களின் மீது முன்னர் பல மிரட்டல் வழக்குகள் உள்ளன.
அரசியல் பிரமுகர் ஜீஸான் சித்திக் என்பவரிடமும் ரூ. 10 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கு இவர்கள் மீது இருக்கிறது. கைதான முகமது இல்சான் மற்றும் நவீத் ஆகியோருக்கு தாவூத் இப்ராஹீமுக்கும் தொடர்ப்பு ஏதேனும் இருக்கிறதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிற கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல் உள்ளதா?
மேலும், இதே போல் பிற கிரிக்கெட் வீரர்கள் மீது மிரட்டல் நடந்துள்ளதா என்பதையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், ரிங்கு சிங்கின் பாதுகாப்பை உறுதி செய்வதில் போலீசார் மற்றும் கிரிக்கெட் வாரியமும் சேர்ந்து நடவடிக்கை எடுக்கவிருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிடம் ரூ. 5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வாட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க: என்னைய பஸ்ல ஏத்தல.. இதனாலதான் ரோகித் அப்படி செய்தார்.. மனம் திறந்த ஜெய்ஸ்வால்!
மேலும் படிக்க: 20 கிலோ எடை குறைத்து ஆளே மாறிய ரோகித் சர்மா.. மெகா பிளான் போடும் ஹிட்மேன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









