IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்கள் அடித்த நிலையில், இங்கிலாந்த அணி 465 ரன்கள் அடித்தது. பரபரப்பாக நடைபெற்ற மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்துள்ளது. கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் சுப்மான் கில் களத்தில் உள்ளனர். ஜெய்சவால் 4 ரன்களுக்கும், சாய் சுதர்சன் 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்துள்ளனர். இன்று 4வது நாள் இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்யும் பட்சத்தில் இந்த போட்டியை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | முதல் டெஸ்ட் முடிந்த பிறகு நீக்கப்படும் 3 வீரர்கள்! கவுதம் கம்பீர் அதிரடி!
ரிஷப் பந்திற்கு அபராதம்?
இதற்கிடையில் மூன்றாம் நாளில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருப்பது ரிஷப் பந்த் அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஐசிசியின் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ், ரிஷப் பந்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்திய அணி பந்து வீசி கொண்டிருக்கும்போது 61 வது ஓவரில், ஹாரி புரூக் முகமது சிராஜின் பந்தை ஸ்லிப்பில் ஒரு ராம்ப் ஷாட் அடித்தார். அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. ரிஷப் பந்த உடனடியாக நடுவரிடம் சென்று பந்தின் வடிவம் மாறி உள்ளதாகவும், உடனடியாக வேறு பந்தை மாற்றி தரும் படியும் கேட்டார்.
ஆனால் நடுவர் பந்தை முழுவதும் சோதனை செய்துவிட்டு விளையாடுவதற்கு ஏற்றார் போல் தான் உள்ளது, பந்தை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ரிஷப் பந்த நடுவரின் மீது பந்த வேகமாக தூக்கி எறிந்தார். பந்து நடுவரின் மீது படவில்லை என்றாலும், ரிஷப் பந்தின் இந்த செயல் ஐசிசியின் போட்டி விதிகளை மீறி உள்ளதாக கூறப்படுகிறது. நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டுவது, நடுவருடன் நீண்ட நேரம் ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபடுவது, ஆபத்தான முறையில் நடுவர் மீது பந்தை வீசுவது ஆகியவற்றின் கீழ் ரிஷப் பந்தின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் ரிஷப் பந்திற்கு நிச்சயம் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Meet our new vice captain pic.twitter.com/8VTpZptSAR
— LSG×Shreyansh (@LSGfam_) June 22, 2025
இந்த விவகாரம் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. போட்டி முடிந்த பிறகு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரிஷப் பந்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுமா? அல்லது அபராதத்துடன் நிறுத்தப்படுமா என்பது போட்டி முடிந்த பிறகு தான் தெரியும்.
மேலும் படிக்க | கேப்டன் ஆன உடன்... விதியை மீறிய சுப்மான் கில்... அடுத்த போட்டியில் அவருக்கு தடையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ