ரிஷப் பண்ட் லக்னோவில் இருந்து நீக்கம்? அதிருப்தியில் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா!

2025 ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயின் சனி சிறப்பாக விளையாடியது.

Written by - R Balaji | Last Updated : May 18, 2025, 05:49 PM IST
  • ஐபிஎல் தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வரும் மூன்று போட்டிகளில் வென்றால் கூட கடினம் தான்
ரிஷப் பண்ட் லக்னோவில் இருந்து நீக்கம்? அதிருப்தியில் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிறப்பாக விளையாடி வந்தது. ஆனால் அடுத்த பாதையில் கடுமையாக சொதப்பி வருகிறது. முதல் 6 போட்டிகளில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி  4 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 5 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பெற்றது. 

அந்த அணிக்கு இந்த ஆண்டு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் வந்தார். அவரை அந்த அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. ஆனால் இத்தொடரில் அவர் பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டு வருகிறார். விளையாடிய 11 போட்டிகளில் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கு குறைவாகவே உள்ளது. அதேபோல் அவரது கேப்டன்சியும் கேள்விக்குறியாகி இருக்கிறது. அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஆலோசகர் ஜாஹிர் கான் மற்றும் கேப்டன் ரிஷப் பண்டுக்கும் இடையே சரியான புரிதல் இல்லை என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் செயின்ஸ் அணி மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றிற்கான வாய்ப்பை பெறலாம் என்ற நிலையே உள்ளது. நடப்பு ஆண்டில் பிளே ஆஃப் சுற்றுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. 

இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மூன்று போட்டிகளில் வென்றாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என சொல்ல முடியாது. ஏனென்றால் மற்ற அணிகளின் நெட் ரன் ரேட் அடிப்படையிலும் அந்த அணி அதிகமாக பெற்று முன்னே இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் குஜராத்  டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மிக வலுவாக உள்ளது. இந்த இரண்டு அணிகளுமே புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. இப் போட்டிகள் லக்னோ ஜெ சூப்பர் ஜெயண்ட்ஸ் சவாலானதாக இருக்கும். எனவே லக்னோ சூப்பர் செயின்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

இதனால் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிருப்த்தியில் உள்ளார். மேலும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால், ரிஷப் பண்ட்டை அணியிலிருந்து விடுவிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அவரின் மோசமான செயல்பாடு காரணமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிங்க: ஐபிஎல் பிளே ஆப் : ராஜஸ்தான் 2 மேட்சும் தோற்றால் ஒரு அணியும் பிளே ஆப் செல்ல முடியாது

மேலும் படிங்க: விராட் கோலிக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சிஎஸ்கே முன்னாள் பிளேயர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News