)
Rishabh Pant Injury: ரிஷப் பண்ட் என்றாலே அதிரடிக்கு பெயர் போனவர் எனலாம். அதோடு சமீப காலமாகவே அவர் காயங்களுக்கு பெயர் பெற்றவராக திகழ்கிறார். அந்தளவிற்கு காயங்களில் சிக்கியிருந்தார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், அதற்கு பின் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில் இருந்தார்.
தொடர் ஓய்வுகள், பயிற்சிகள், சிகிச்சைகள் என ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பையில்தான் இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் திரும்பினார். அப்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது, அவரும் நம்பர் 3 இடத்தில் இறங்கி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்தியா, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20ஐ மற்றும் ஓடிஐ போட்டிகளை விளையாடியது. அதுதான் ரிஷப் பண்ட் விளையாடிய கடைசி டி20ஐ மற்றும் ஓடிஐ தொடர்கள் எனலாம்.
டி20ஐ ஸ்குவாடில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேநேரத்தில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஸ்குவாடில் இருந்தாலும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து கடந்த ஒன்றரை வருடங்களாக ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் கடந்தாண்டு ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் போனார். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சிறப்பை பெற்றார். இவரை லக்னோ கேப்டனாக்கியது, லக்னோ அணி கடந்தாண்டு 7வது இடத்தில் நிறைவுசெய்தது.
டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை, ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரிலும் சுமாரான ஆட்டத்தை ரிஷப் பண்ட் வெளிக்காட்டினார். 9 இன்னிங்ஸில் 255 ரன்களை அடித்திருந்தார், சதமே அடிக்கவில்லை. அவரின் சராசரி 28.33 ஆக இருந்தது, இது மிகக் குறைவாகும். அடுத்து, இங்கிலாந்தில் நடந்த ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 7 இன்னிங்ஸில் 479 ரன்களை அவர் அடித்திருந்தார். சராசரி 68.42 ஆக இருந்தது. இதில் 2 சதம் மற்றும் 3 அரைசதமும் அடித்திருந்தார்.
இங்கிலாந்து தொடரில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்க, 4வது போட்டியின் போது ரிஷப் பண்டின் வலது காலின் பாதத்தில் பந்துப்பட்டதில் பெரும் காயம் ஏற்பட்டது. கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட இந்த காயத்தை தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் ஓய்வுக்கு பின்னர், ரிஷப் பண்ட் இப்போதுதான் டெஸ்ட் ஸ்குவாடுக்கு திரும்பினார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் ஸ்குவாடில் ரிஷப் பண்ட் இடம்பிடித்துள்ளார்.
அதற்கு முன் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி வென்றது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் வேகமாக அடித்த 91 ரன்கள்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
Rishabh Pant retires hurt after taking three blows today. First on the helmet, second on the left-hand elbow, third on the abdomen. Tough day for the fighte pic.twitter.com/kdTX8jdM8B
(@harsh03443) November 8, 2025
அந்த வகையில், தற்போது தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இதில் அடுத்தடுத்து 4 விக்கெட் வீழ்ந்த நிலையில், கேப்டன் ரிஷப் பண்டு இன்று காலை பேட்டிங் செய்ய வந்தார். அவர் பேட்டிங் செய்யும்போது அடுத்தடுத்து மூன்று முறை பந்து தாக்கியதால் காயமடைந்து அவர் ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 20 நிமிடங்களில் மூன்று முறை பந்து தாக்கியிருக்கிறது. உடனே சிகிச்சை மேற்கொள்வதற்கு தற்போது ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பியிருக்கிறார்.
முதலில் அவர் ரிவர்ஸ் ஷாட் அடிக்க முயன்றபோது பந்து தலையில் தாக்கியது. அடுத்து புல் ஷாட் அடிக்க முயன்றபோது இடதுகை மணிக்கட்டு பகுதியில் பந்து தாக்கியது. இதுவும் அவருக்கு சிறு வழியை கொடுத்துள்ளது. மூன்றாவது வந்து அவரது வயிற்றில் பட்டுள்ளது. இதன்பின் அவர் வலியில் துடித்தார். அடுத்து பிரதான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக தற்போது அவரை பெவிலியனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
காயம் பெரிதாக இல்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏ அணி இன்றைய மதிய உணவு இடைவேளை வரை 177 ரன்கள் முன்னிலை வகித்துள்ளது. இந்திய அணி மொத்தம் 5 விக்கெட்டை இழந்துள்ளது. கடந்த இன்னிங்ஸில் சதம் அடித்த துருவ் ஜூரேல் இப்போட்டியில் விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொள்வார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ