சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிகெட் வீரரான டிம் டேவிட் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர். உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற அவர் கடந்த ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவரை மும்பை அணி 8.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 40 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட அவருக்கு, மும்பை அணி கொடுத்த ஜாக்பாட் டிம் டேவிட்டுக்கே வியப்பாக இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 விக்கெட் இழந்த அணி


ஆனால், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி சரிவர பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய டிம் டேவிட், 12 மற்றும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பளிக்காமல் பெஞ்சில் உட்கார வைத்தார். ஏற்கனவே 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியிருக்கும் நடப்பு சாம்பியன் மும்பை அணி, சரியான அணியை ஃபார்ம் செய்ய சில கடினமான முடிவுகளை எடுத்து வருகிறது.



இதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் விமர்சித்துள்ளார். 8.5 கோடி ரூபாய் கொடுத்து ஒரு வீரரை வாங்குகிறீர்கள் என்றால், அவர் நிச்சயம் 2 போட்டிகளுக்கும் மேலாக விளையாடும் திறமை படைத்தவராக தான் இருப்பார்.



டிம் டேவிட்டை மும்பை அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்காதது வியப்பாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதேபோல் நெட்டிசன்களும் மும்பை அணி மற்றும் ரோகித் சர்மாவை விமர்சித்துள்ளனர். டிம் டேவிட்டுக்கு உரிய வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அவருக்கு பதிலாக பொல்லார்டை வெளியே உட்கார வைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு - இந்த வீரர் விளையாடமாட்டார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR