Rohit Sharma 20 Kg Weight Loss: இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்தார். அதே வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார். இதனால் அவரை கடந்த பல மாதங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் பார்க்கமுடியாத சூழல் ஏற்பட்டது.
கேப்டன் பதவி நீக்கம்
தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இது முடிந்த கையோடு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் விளையாட இருக்கிறது. இதில் ஒருநாள் தொடர்ரில் ரோகித் சர்மா விளையாடுகிறார். இதற்கான இந்திய அணியை கடந்த வாரம் சனிக்கிழமை அக்டோபர் 04ஆம் தேதி அன்று தேர்வுக்குழு அறிவித்தது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்ந்து வந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தனர்.
அனுபவம் மிகுந்த வீரரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால்,அவரது கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வருகிறதோ என கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் ரோகித் சர்மா, 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்ற பிறகே ஓய்வு பெறுவதில் உறுதியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது ஃபிட்னஸை மேம்படுத்தும் விதமாக அவர் அவர் சுமார் 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார். ரோகித் சர்மா கடந்த மூன்று மாதங்களில் இதனை செய்திருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஃபிட்டாக மாறிய ரோகித் சர்மா
கடந்த சில வருடங்களாகவே ரோகித் சர்மாவின் உடற்தகுதி குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. அவர் தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில், விமர்சனங்களுக்கு பதிலடிக்கொடுக்கும் வகையில் தனது தோற்றத்தை மாற்றி ஃபிட்டாகி இருக்கிறார் ரோகித் சர்மா. 2027 உலகக் கோப்பை வரை இந்திய ஒருநாள் அணியில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால், அவர் ஃபிட்டாக இருப்பது அவசியம். அதனை மனதில் வைத்து அவர் இந்த முடிவை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.
மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தனியார் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தந்தார் ரோகித் சர்மா. அப்போது அவர் புதிய லுக்கில் ஃபிட்டாக காணப்பட்டார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அவரது ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி.. "இந்த வீரர்தான் அதிக ரன் குவிப்பார்"!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









