)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்னும் நட்சத்திர வீரர்ருமான ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அந்த வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக கூறி, இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடருவதாக தெரிவித்தார்.
சாதனைகளை படைத்த ரோகித் சர்மா
இந்த சூழலில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பங்கேற்றார். இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய ரோகித் சர்மா முதல் போட்டியில் ஏமாற்றத்தை கொடுத்தாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் அரைசதம் மற்றும் சதத்தை விளாசி தனது ஃபார்மை நிருபித்தார்.
ரோகித் சர்மா இத்தொடரில் சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்கள் எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 12, ஓடிஐ கிரிக்கெட்டில் 33 மற்றும் டி20 போட்டிகளில் 5 சதங்கள் என மொத்தம் 50 சதங்களை அடித்து சர்வதேச அரங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார். அதேபோல் இத்தொடரில் மூலம் இந்திய தொடக்க வீரராக அதிக ரன்கள், ஆஸ்திரேலியாவில்1000 ரன்களை கடந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் படைத்தார்.
வைரலாகும் ரோகித் சர்மாவின் பதிவு
ஆஸ்திரேலியா தொடரை முடித்த கையோடு இந்திய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த அணிகளுடனான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவின் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, கடைசியாக ஒருமுறை சிட்னியில் இருந்து விடைபெறுகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஓய்வுக்கான அறிகுறியா?
ரசிகர் ஒருவர், ஏன் கடைசியாக ஒரு முறை, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு ஆஸ்திரேலியா தொடர் ஒன்று இருக்கிறதே என கமெண்ட் செய்துள்ளார். ரோகித் சர்மா உலகக் கோப்பையின்போது 40 வயதை நெருங்கி விடுவார். இதன் காரணமாக அத்தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் அந்த சந்தேகத்தை ஓரளவு போக்கியது என்ற சொல்லலாம். இந்த சூழலில், ரோகித் சர்மா இப்படி பதிவிட்டுள்ளது, மீண்டும் ஊகங்களை கிளப்பி உள்ளன. சிலர் இது ஓய்வுக்கான அறிகுறியாக இருக்குமோ என கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ