2024 டி20 உலக கோப்பையை வெல்ல இவர்தான் காரணம்.. மனம் திறந்த ரோகித் சர்மா!

இந்திய அணி சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு வென்ற நிலையில், அப்போதைய கேப்டன் ரோகித் சர்மா ஒரு பேட்டியில் இது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jun 27, 2025, 01:26 PM IST
  • 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது
  • மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா
2024 டி20 உலக கோப்பையை வெல்ல இவர்தான் காரணம்.. மனம் திறந்த ரோகித் சர்மா!

2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. 2007ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்றது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், 2024 உலகக் கோப்பையை வென்றது குறித்து ரோகித் சர்மா பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். குறிப்பாக, அவர் இறுதி போட்டியின் வெற்றி குறித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

ரோகித் சர்மா பேசியதாவது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி போட்டியின்போது, நான் மிகவும் பதற்றத்தில் இருந்தேன். தென்னாப்பிரிக்காவை ஆதிக்கம் செய்ய விட்டுவிட்டோமே என்று எண்ணினேன். அதேசமயம், எனது மனதில் இன்னொரு விஷயமும் ஒடிக்கொண்டிருந்தது. நமது அணியின் லோயம் மிடில் ஆர்டர் இந்த தொடரில் அதிகமாக பேட்டிங் செய்யவில்லையே என்று. ஆனால் அக்சர் படேல் சிறப்பாக விளையாடினார். அவரை பற்றி பலரும் பேசவில்லை. 

அந்த இறுதி போட்டியில் அவர் 31 ப்ந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதுதான் அந்த பேட்டியையே மாற்றியது. மேலும், இறுதி போட்டியில் ஒருவர் முழுவதுமாக களத்தில் நின்று ரன்களை சேர்க்க வேண்டும் என நினைத்தோம். அதை விராட் கோலி அற்புதமாக செய்தார். ஏன்னென்றால், அப்போதுதான் அக்சர், ஹர்திக் போன்றவர்கள் வந்து அவர்களது பங்கை செய்ய முடியும் என ரோகித் சர்மா தெரிவித்தார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2024 டி20 போட்டியில் ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒன் டவுனில் இறங்கிய ரிஷப் பண்ட் 0, சூர்யகுமார் யாதவ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 34 ரன்களுக்கே 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், அக்சர் படேல், விராட் கோலியுடன் கைக்கோர்த்து ரன்களை சேர்த்தார். விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் சேர்க்க, அக்சர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் இந்திய அணி 176 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. குயிண்டன் டி காக் 39, ஸ்டப்ஸ் 31, க்ளெசன் 52 ரன்களும் சேர்த்த்திருந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் அர்ஷதீப் சிங் தலா 2 விக்கெட்களையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.

மேலும் படிங்க: WTC பாயிண்ட்ஸ் டேபிள்: வங்கதேசம்-இலங்கையை விட பின்தங்கிய இந்தியா

மேலும் படிங்க: IND vs ENG: முதல் டெஸ்டை விடுங்க! 2வது டெஸ்டில் இந்திய அணிக்கு இருக்கும் பேராபத்து!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News