டி20 உலகக் கோப்பை.. சீனியர்கள் இல்லாத இந்திய அணி - ரோகித் சர்மா உருக்கம்!

Rohit Sharma About T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அது குறித்து முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பேசி உள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Jan 23, 2026, 12:17 PM IST
  • டி20 உலகக் கோப்பை 2026
  • ரோகித் சர்மா உருக்கம்
  • முழு விவரம்
டி20 உலகக் கோப்பை.. சீனியர்கள் இல்லாத இந்திய அணி - ரோகித் சர்மா உருக்கம்!

Rohit Sharma Latest News: அடுத்த மாதம் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 07ஆம் தேதி முதல் மார்ச் 08ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், அதனை 4 குருப்புகளாக பிரித்துள்ளனர். இதில் குருப் ஏ பிரிவில் இந்திய அணி உள்ளது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த சூழலில், அதனை தக்கவைக்கும் முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 

Add Zee News as a Preferred Source

இளம் படையுடன் இந்திய அணி 

தற்போதுள்ள இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்கள் யாரும் இல்லை. ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே அனுபவம் வாய்ந்த வீர்ராக இருக்கிறார். கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு விராட் கோலி, தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட படையாக களமிறங்குகிறது. அதேபோல் அப்போது ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தார். இப்போது கவுதம் கம்பீர் உள்ளார். 

Gautam Gambhirகம்பீர் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி  

கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்த பின்னர் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதனால் ரசிகர்கள் இடையே வரும் டி20 உலகக் கோப்பை மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளன. இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை குறித்து முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பேசி உள்ளார். 

Rohit Sharma: அணியில் இல்லைனா என்ன? - ரோகித் சர்மா 

இது தொடர்பாக பேசிய அவர், 2007ஆம் ஆண்டில் இருந்து டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறேன். இந்த முறை அணியில் இல்லை. அதனை வெளியில் இருந்து ஒரு பார்வையாளராக பார்க்க உள்ளேன் அவ்வளவுதான். அது எனக்கொரு புதிய அனுபவமாக இருக்கும். எனவே வரும் டி20 உலகக் கோப்பையில் நான் அணியில் இல்லை என்றாலும் நிச்சயம் மைதானத்தில் இருந்து போட்டியை பார்ப்பேன். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அதுவே எனது எண்ணம். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.

மேலும் படிக்க: CSK வீரர் அடுத்தடுத்து சதம்.. செம ஃபார்ம்! பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா?

மேலும் படிக்க: ஐபிஎல்லில் அதிக ரன்கள்! ஆனா ஒருமுறை கூட கோப்பையை ஜெயிக்கல.. லிஸ்டில் ஒரே ஒரு CSK வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News