இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர அறிவித்த சில தினங்களில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர்களின் அறிவிப்பு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.
கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா ஏன் திடீரென ஒய்வை அறிவித்தார். இதற்கு என்ன காரணம். கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியா தொடர் தான் காரணமா? உள்ளிட்ட பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். ரோகித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் சரியான பங்களிப்பை பேட்டிங்கில் அவரால் கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்து வந்தார்.
குறிப்பாக 2024- 2025 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கடுமையாக சொதப்பினார். அவர் அந்த தொடரில் வெறும் 31 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். அதே சமயம் அவரது கேப்டன்ஷில் இந்திய அணி தொடரை இழந்தது. இச்சூழலில் தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்த நிலையில், தாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தது தனது தந்தைக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், எனது தந்தை ஒரு போக்குவரத்து நிறுவத்தில் வேலை செய்வதார். நான் சொன்னது போல, என் அம்மா செய்தது போல, நாங்கள் எங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காக என் தந்தை பல விஷயங்களை தியாகம் செய்திருக்கிறார்.
எனது தந்தை ஒரு டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் விரும்பி பார்ப்பவர். எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது. நான் ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்களை குவித்த போது அவர் பெரியதாக் அதை பற்றி பேசியது இல்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 30, 40 அல்லது 60 ரன்கள் அடித்திருந்தால் கூட அவர் நீண்ட நேரம் விரிவாக பேசுவார். அந்த அளவிற்கு எனது தந்தை டெஸ் கிரிக்கெட்டை ரசித்தார்.
அந்த வகையில், நான் ஓய்வு அறிவித்தது அவரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியது. எனினும், அவரிடம் அதே அளவுக்கு மகிழ்ச்சியும் இருந்தது. அது தான் என் தந்தை. நான் இன்று இந்த நிலையில், இருப்பதற்கு அவர் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியுள்ளார். அவரது உதவியின்றி, இது எதுவும் சாத்தியமில்லை என ரோகித் கூறினார்.
மேலும் படிங்க: RCB-ஐ சேர்ந்த 4 பேர் கைது... யார் நிகில் சோசலே...? இவர் கைது செய்யப்பட்டது ஏன்...?
மேலும் படிங்க: இந்தியா A vs இங்கிலாந்து லயன்ஸ் 2வது பயிற்சி டெஸ்ட்: லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









