ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிப்பாரா? முடிவு செய்யும் இன்றைய போட்டி

Rohit Sharma : ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இன்றைய போட்டிக்குப் பிறகு அந்த அணி தீர்மானிக்க உள்ளது.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 4, 2025, 11:48 AM IST
  • ரோகித் சர்மாவுக்கு வந்திருக்கும் சிக்கல்
  • மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிப்பாரா?
  • பிளேயிங் லெவனில் இருந்து நீக்கவும் வாய்ப்பு
ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிப்பாரா? முடிவு செய்யும் இன்றைய போட்டி

Rohit Sharma News Today : இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் அவர் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 21 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவர் மீது மும்பை அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருக்கிறது. ஓப்பனிங் இறங்கும் அவர் முதல் பேட்டிங் அல்லது சேஸிங் என எதுவாக இருந்தாலும் பொறுப்பில்லாத ஷாட்டுகளை விளையாடி அவுட்டாவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது கடந்த சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மாவின் ஐபிஎல் ரன்கள் மிக மோசமாகவே இருக்கிறது. ஏதாவது ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடுவதை வாடிக்கையாக  வைத்திருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

இதுவரை 80 ஐபிஎல் போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியிருக்கும் பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா இருக்கிறார். இந்த டேட்டாவை எல்லாம் தீர அலசி ஆராய்ந்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இனியும் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டுமா? என ஆலோசிக்க தொடங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த அணிக்கும் அவர் தேவையில்லாத சுமையாகவும் இருப்பதால் ரோகித் சர்மா குறித்து தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் உணர்ந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்தே அவரை கேப்டன்சியில் இருந்து தூக்கியது. இருப்பினும் ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் அணிக்கு சரியான பங்களிப்பை வழங்காமல் இருக்கிறார். 

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் ரோகித் சர்மா குறைந்தபட்சம் ஒரு 30 ரன்களாவது எடுத்தால் அந்த அணிக்கு உபயோகமாக இருக்கும். ஆனால் வெறும்  ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுப்பதை ரோகித் சர்மா வாடிக்கையாக வைத்திருகிறார். கடுமையான விமர்சனங்கள் எழும் நேரத்தில் ஒரு போட்டியில் மட்டும் சிறப்பாக விளையாடிவிட்டு மீண்டும் பழைய பார்முக்கு திரும்பி விடுகிறார். இதனை நன்கு புரிந்துவைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இனியும் அப்படியான இடம் ரோகித் சர்மாவுக்கு கொடுக்க தயாராக இல்லை.

இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து இனி அவரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது குறித்து திட்டவட்டமான முடிவை எடுக்க உள்ளது. இது ரோகித் சர்மாவும் தெரிந்து வைத்திருக்கிறார். அதனால் இன்றைய போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்வது குறித்த தெளிவாக தெரியும்.

மேலும் படிக்க | SRH-ஐ பொட்டலம் போட்ட KKR; நெட் ரன்ரேட்டிலும் பெரிய அடி - சோகத்தில் காவ்யா!?

மேலும் படிக்க | தொடர் தோல்வி! Unsold வீரரை குறிவைக்கும் CSK; பிளமிங் போடும் கணக்கு என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News