சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்குவாட்க்கு கடந்த போட்டியின் போது கையில் காயம் ஏற்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, வேகமாக வந்த பந்து அவரது கையை பதம் பார்த்தது. அந்த வலியுடன் அரை சதமும் அடித்து இருந்தால் ருதுராஜ் கெய்குவாட். இந்நிலையில் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி செய்தியாளர் சந்திப்பில் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். "ருதுராஜ் கெய்குவாட் காயம் இன்னும் குணமடையவில்லை. இரவு அவரது காயத்தின் தன்மை பொறுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடு வாரா? மாட்டாரா என்பதை முடிவு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அஸ்வின் தேவையே இல்லை... இந்த வீரர் வந்தால் சிஎஸ்கேவின் பிரச்னைகள் தீரும்!
மேலும் பேசிய அவர், "அவருக்கு கையில் இன்னும் வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒருவேளை ருதுராஜ் கெய்குவாட் நாளைய போட்டியில் விளையாடவில்லை என்றால் வேறு ஒருவர் கேப்டன்சி பொறுப்பை ஏற்பார். எங்கள் அணியில் ஒரு இளம் விக்கெட் கீப்பர் இருக்கிறார், அவர் கூட ஏற்கலாம்" என்று சூசகமாக தெரிவித்துள்ளார் மைக் ஹஸ்ஸி. இந்த செய்தியை தற்போது சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது. மறுபுறம் நாளையுடன் தோனி ஓய்வை அறிவிக்க உள்ளார் என்றும் செய்திகள் தீயாய் பரவி வருகிறது.

கேப்டன் தோனி
2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து ஐந்தாவது கோப்பையை வென்று கொடுத்தார் தோனி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் கடைசி பதில் சென்னை அணி அந்த போட்டியில் வென்று இருந்தது. அதன் பிறகு 2024 ஆம் ஆண்டு தனது கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கெய்குவாடிடம் ஒப்படைத்தார் தோனி. அதிலிருந்து கடந்த வருடமும், இந்த வருடமும் கடைசி இரண்டு ஓவர்களில் மட்டுமே பேட்டிங் இறங்குகிறார் தோனி. அவருக்கு முட்டியில் ஏற்பட காயமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிரான இந்த முக்கியமான போட்டியில் ருதுராஜ் கெய்குவாட் இல்லாமல் இருந்தால், அணிக்கு பெறும் பின்னடைவை ஏற்படுத்தும்.
காரணம் தற்போது சென்னை அணியில் சிறப்பாக விளையாடும் வீரர்களில் ஒருவராக ருதுராஜ் உள்ளார். முதல் போட்டியிலும் சரி, கடந்த போட்டியிலும் சரி கடினமான பேட்டிங் பிட்ச்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பி வரும் நிலையில் ருதுராஜ் மட்டுமே நல்ல ரன்கள் அடித்து வருகிறார். ஒருவேளை அவர் நாளை விளையாடவில்லை என்றால் வேறு ஒரு வீரரை களம் இறக்க வேண்டி இருக்கும். ஆனால் அது எந்த அளவிற்கு சென்னை அணிக்கு சாதகமாக அமையும் என்று தெரியவில்லை. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்துள்ளதால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | சிஎஸ்கேவின் 'மினி ரிஷப் பண்ட்' - இவரை சேர்த்தால் வெற்றிகளை குவிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









