டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

எம்.எஸ். தோனி கேப்டன் பதவில் இருந்து இறங்கிய பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக தடுமாறி வருகிறது. 2024 ஆண்டில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் தலையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடி வருகிறது. அவரது தலைமையில் சிஎஸ்கே அணி இதுவரை பெரிதாக செயல்படவில்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது. நடந்து வரும் 2026 ஐபிஎல் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒரு மோசமான நிலையில் உள்ளது. ருதுராஜின் கேப்டன்சிதான் சரியில்லை என விமர்சித்து வந்த ரசிகர்கள் பலரும் தற்போது அவரின் பேட்டிங்கையும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (ஏப்ரல் 11) அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. வழக்கம்போல், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இந்த சூழலில், சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே ரன் குவித்த நிலையில், மறுப்பக்கம் ருதுராஜ் கெய்க்வாட் கடுமையாக தடுமாறி வந்தார்.
இந்த சூழலில், 17 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அழுத்தத்தில் இருந்து வந்த நிலையில், அக்சர் படேல் வீசிய பந்தை சிக்ஸ் அடிக்க முயன்று லெக் ஸ்சைடில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டி20 போட்டியை டெஸ்ட் போல் விளையாடி வருகிறார் என்றும் பந்துகளை வீணடிக்கிறார் என்றும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் முன்பை போல் இல்லை. தற்போது உள்ள களம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. எளிதாக 230 ரன்களை கடக்க முடியும். அப்படியான மைதானத்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் தடுமாறி பந்துகளை வீணடிப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் இந்த 2026 ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி வெறும் 56 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 22 பந்துகளில் 28 ரன்களை மட்டுமே அடித்தார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார். தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் 15 ரன்களை எடுத்தார். இப்படி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை ஆடி ரன்களையும் குவிக்காமல் இருந்து வருகிறார்.
டெல்லி அணிக்கு எதிராக ருதுராஜ் கெய்வாட் ஆட்டமிழந்த பின்னர் களத்திற்கு ஆயூஷ் மாத்ரே வந்தார். அவர் சஞ்சு சாம்சனுடன் சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினார். இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் செய்தனர். அணியின் ரன்களும் நிலையாக ஏறியது. இந்த சூழலில், 36 பந்தில் 59 ரன்கள் குவித்து வெளியேறினார். இதையடுத்து சிவம் துபே களமிறங்கி 20 ரன்கள் குவித்தார். மறுபக்கம் தொடக்கம் முதலே ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் சதம் அடித்து 115 ரன்களை குவித்தார். இதனால் அணியின் ஸ்கோர் 212 ஆக உயர்ந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 230 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்ய தவறினார். இடையில் சில ஓவர்களை டெல்லி அணி சிறப்பாக வீசியது. இதன் காரணமாக சிஎஸ்கே அணியால் 230 ரன்களை தாண்ட முடியாமல் போனது.
சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 212 ரன்களை குவித்த நிலையில், அந்த அணி தனது முதல் வெற்றியை பெறுமா என்ற கேள்வி எழும்பி உள்ளது. சிஎஸ்கே அணி தனது முதல் வெற்றியை பெற பந்து வீச்சு மற்றும் ஃபில்டிங்கி தவறு செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் தனது முதல் வெற்றியை பெற்று 2 புள்ளிகளை பெற முடியும்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் அணி தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. அதேசமயம் அவரும் ரன்களை குவிக்க தவறுகிறார். இதனால் அவரை அணியை விட்டே தூக்க வேண்டும் என்றும் கேப்டன் அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சனிடம் பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ