தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய அணியின் சில வீரர்கள் கவுண்டி சாம்பியன்ஷிப் 2025 சீசனில் விளையாட உள்ளனர். இதற்காக கவுண்டி அணிகளுடன் ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு சென்று கிரிக்கெட்டில் ஆடுவது தங்களின் திறமையை அதிகரிக்கும் என்றும், மீண்டும் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்றும் வீரர்கள் நம்புகின்றனர். இதற்கு முன்பு பல வீரர்கள் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடி உள்ளனர். இந்த ஆண்டு கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இந்திய அணியின் 4 வீரர்களை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்... ரெஸ்ட் எடுக்க வந்த இடத்திலும் பஞ்சாயத்து!
யுஸ்வேந்திர சாஹல்
இந்திய அணியின் மூத்த லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது முறையாக விளையாடுகிறார். தற்போது நடைபெற்ற வரும் கவுண்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நார்தாம்ப்டன்ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்தாண்டு முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடி இருந்தார் சாஹல். 4 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்திருந்தார். இந்த சீசனில் ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட்டிய சாஹல் 14 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இசான் கிசான்
கவுண்டி சாம்பியன்ஷிப்பில் நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக இசான் கிசான் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடியிருந்தார் இசான் கிசான். தென் ஆப்பிரிக்காவின் கைல் வெர்ரெய்னுக்கு பதிலாக இசான் கிசான் இடம் பிடித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் தனது இடத்திற்காக போராடி வரும் இசான் கிசானுக்கு இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
திலக் வர்மா
கவுண்டி சாம்பியன்ஷிப்பில் ஹாம்ப்ஷயர் அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளார் திலக் வர்மா. இந்திய டி20 அணியில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள திலக் வர்மா ரெட் பால் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப்பில் இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் டெவால் பிரிவீஸ்க்கு பதிலாக ஹாம்ப்ஷயர் அணியில் இணைந்துள்ளார் திலக் வருமா. T20 பிளாஸ்டில் அவரால் விளையாட முடியாது என்றாலும் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட உள்ளார். 18 முதல் தர ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ள திலக் வர்மா 50.16 சராசரியுடன் ஐந்து சதங்களை அடித்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்
கவுண்டி சாம்பியன்ஷிப்பில் புகழ்பெற்ற அணியான யார்க்ஷயர் அணிக்காக இந்திய அணியின் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆண்டு விளையாட உள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணியில் இடம் பெற்று இருந்த ருதுராஜ் கெய்க்வாட்க்கு பயிற்சி ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறி இருந்த ருதுராஜ் கெய்க்வாட்க்கு இந்த கவுண்டி சாம்பியன்ஷிப் முக்கியமாக ஒன்றாக உள்ளது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட் மெட்ரோ பேங்க் ஒரு நாள் கோப்பையிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்காக டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் தற்போது அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தனது திறமையை நிரூபிக்க ருதுராஜ் கெய்க்வாட்க்கு இந்த தொடர் ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | கேப்டன் ஆன உடன்... விதியை மீறிய சுப்மான் கில்... அடுத்த போட்டியில் அவருக்கு தடையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ