WTC Final: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
)
AUS vs SA: 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி நேற்று (ஜூன் 11) தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் டெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அலக்ஸ் கேரி 23 ரன்களும் அடித்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் டக் ஆவுட் ஆகி தொடக்கமே அணிக்கு ஏமாற்றம் அளித்தார். அதையடுத்து ரிக்கில்டன் 16, முல்டர் 6, ஸ்டப்ஸ் 2 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் எடுத்திருந்தது. பவுமா மற்றும் பெடிங்ஹாம் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 12) இரண்டாவது நாள் போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய நிலையில், பவுமா மற்றும் பெடிங்ஹாம் ரன்களை சேர்த்து வந்தனர். இவர்களின் கூட்டணியை ஆஸ்திரேலியா அணியால் பிரிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களில் ஆட்டமிழக்க, அதைடுத்து வந்த வெர்ரெய்ன் 13, மார்கோ யான்சன் 0, பெடிங்ஹாம் 45, கேசவ் மகாராஜ் 7, ரபாடா 1 ரன்கள் என ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிடிக்கா அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கம்மின்ஸ் சாதனை
ஆஸ்திரேலியா அணி சார்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்று கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 50 ஆண்டு சாதனையை படைந்துள்ளார். 1975ஆம் ஆண்டுக்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் எதிரணி கேப்டனை அவுட் ஆக்கும் நிகழ்வு அரங்கேறி உள்ளது.
1975ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா கேப்டன் இயான் சேப்பல், இங்கிலாந்து கேப்டன் டோனி கிரெய்க் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அதற்கு முன்பாக 1909ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா கேப்டன் மான்டி நோபிள் இங்கிலாந்து அணி கேப்டன் ஆர்ச்சி மெக்லாரன் விக்கெட்டை இரண்டு இன்னிங்ஸிலும் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில், தற்போது பேட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமாவை வீழ்த்தி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ