ரோகித்தை விட விராட் பல மடங்கு உயர்ந்தவர்.. சஞ்சய் மஞ்சுரேக்கர்!

Sanjay Manjrekar: டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ரோகித் சர்மாவை ஒப்பிட வேண்டாம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் வலியுறுத்தி உள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Jun 9, 2025, 07:35 PM IST
  • ரோகித், கோலி இருவரையும் ஒப்பிட வேண்டாம்
  • சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து
ரோகித்தை விட விராட் பல மடங்கு உயர்ந்தவர்.. சஞ்சய் மஞ்சுரேக்கர்!

சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில் கூட ரோகித் மற்றும் விராட் கோலி அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என கூறினார். 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், சுப்மன் கில்லின் இந்த கருத்தில் தனக்கு முரண்பாடு இருப்பதாக சஞ்சய் மஞ்சுரேக்கர் பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர், புதிய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிகப்பட்டிருக்கும் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துவதாக கூறி இருந்தார். இந்த கருத்தில் எனக்கு முரண் உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை ரசிகர்கள் roko என்று அழைப்பதுண்டு. இவர்கள் இருவரையும் ஒப்பிடுவதும் உண்டு. 

ஆனால் இந்த ஒப்பீடு வெள்ளை பந்திற்கு மட்டுமே பொருந்தும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருவரும் ஒப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளனர். ஆனால் சிவப்பு பந்து அதாவது டெஸ்ட் கிரிக்கெட் என்று வரும்போது ரோகித் சர்மாவை விட விராட் கோலி பல மடங்கு உயர்ந்தவர். எனவே இருவரையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. இதற்கு அவர்களின் டெஸ்ட் ரன்களை பார்த்தாலே உண்மை தெளிவாகும். 

தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ் போட்டிகளில் விராட் கோலி 12 சதங்களை அடித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். 100 இன்னிங்ஸ்களுக்கு மேல் விளையாடியும் இந்த நாடுகளில் அவரது சராசரி 40 என்ற அளவில் உள்ளது. 

இங்கிலாந்தில் முன்பே ரோகித் விளையாடி இருந்தால், அவரது சராசரி 30க்கும் குறைவாக இருந்திருக்கும். எனவே டெஸ் கிரிக்கெட் பற்றி பேசுகையில் விராட் கோலியுடன் ரோகித்தை ஒப்பிட வேண்டாம் என சஞ்சய் மஞ்சுரேக்கர் வலியுறுத்தி உள்ளார். 

மேலும் படிங்க: ஆர்சிபி அணிக்கு 1 வருட தடை? பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு என்ன?

மேலும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயரை மனதார நினைத்து... அவருடன் குடும்பம் நடத்தி வருகிறேன் - நடிகை பகீர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News