Sanju Samson : இந்திய கிரிக்கெட் அணி இப்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. மூன்றாவது போட்டி நாளை மறுநாள் டிசம்பர் 14 ஆம் தேதி நடக்கிறது. இப்போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்து இப்போதே ரசிகர்கள் மற்றும் முன்னாள் பிளேயர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு அணியில் ஏன் இடம் கொடுப்பதில்லை? என்ற கேள்வியை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பிசிசிஐக்கு ஆவேசமாக எழுப்பியுள்ளனர். டி20 பார்மேட்டில் விளையாட தேர்வு செய்யும் பிசிசிஐ, அதிலும் அவரை விளையாட வைக்காமல் வேண்டுமென்றே புறக்கணிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
சஞ்சு சாம்சன் நீக்கம்
டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 180க்கும் மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி மூன்று சதங்களையும் அடித்துள்ளார். ஆனால் அவரை அந்த இடத்தில் விளையாட வைக்காமல் திடீரென பின் வரிசை பேட்டராக மாற்றிய பயிற்சியாளர் இப்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் சேர்ப்பதில்லை. அதேநேரத்தில் டி20 போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடிக் கொண்டிருக்கும் சுப்மன் கில்லுக்கு ஓப்பனிங் வாய்ப்பை தொடர்ச்சியாக கொடுக்கிறார் கம்பீர். கில்லுடன் ஒப்பிடுகையில் சிறப்பான ஆட்டத்தையே விளையாடியிருக்கிறார் சஞ்சுசாம்சன். ஆனால் அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்காமல் வெளியே உட்கார வைக்கிறார் என தெரியவில்லை என முன்னாள் பிளேயர்களே கடுமையான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்திய முன்னாள் பிளேயர்கள் ஆதங்கம்
இந்திய அணியின் முன்னாள் பிளேயர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் பத்ரிநாத் ஆகியோர் இந்திய அணி 2வது டி20 போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தமிழ் கமெண்ட்டரியில் இருந்து இந்த கேள்வியை முன் வைத்தனர். பத்ரிநாத் பேசும்போது, ‘ எனக்கு சுத்தமாக புரியவில்லை, சாம்சன் நல்லா விளையாடியது ஒரு தப்பா, அவரை பிளேயிங் லெவனிலயே சேர்க்காமாட்டேங்குறீங்களே?’ என வருத்தத்துடன் கேள்வியை எழுப்பினார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீ காந்த் பேசும்போது, ‘சஞ்சு சாம்சன் உண்மையிலேயே பாவம்பா.. கில்லுக்கு இவ்வளவு வாய்ப்பு கொடுக்கிறீங்க, அதே வாய்ப்ப சஞ்சுவுகு ஏன் கொடுக்கமாட்டேங்குறீங்க. சூர்யகுமாரும் ஒழுங்கா விளையாடல, ஆனால் அவங்களுக்கு எல்லாம் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கும்போது சஞ்சுவுக்கு மட்டும் ஏன் கொடுக்க மாட்டேங்குறீங்க’ என கேட்டார்.
இர்பான் பதான் கேள்வி
இந்திய அணியின் முன்னாள் பிளேயர் இர்பான் பதான் பேசும்போது, சஞ்சு சாம்சன் 3 சதமடித்திருக்கிறார். ஆனால், சுப்மன் கில்லுக்காக சாம்சன 5வது இடத்தில் ஆட வைத்த கம்பீர் இப்போது அந்த இடத்திலும் அவரை ஆட வைப்பதில்லை. இது என்ன மாதிரியான ஸ்ட்ரேடஜி என எனக்கு தெரியவில்லை. டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு இருவரும் ஆடிய 21 இன்னிங்ஸ்களை பார்க்கும்போது, அதிலும் சாம்சனே சிறப்பாக விளையாடியுள்ளார். 2 அரைசதம், 3 சதங்கள் விளாசி இருக்கிறார். ஆனால் கில் வெறும் 2 அரைசதங்கள் விளாசி ரன்களிலும் குறைவாக இருக்கிறார். இப்படி இருந்தும் அணியில் சாம்சனுக்கு ஏன் இடம் இல்லை?.
பிசிசிஐ பாலிடிக்ஸ்
இதே கேள்வியை பலரும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நோக்கி ஆவேசமாக எழுப்பியுள்ளனர். சஞ்சு சாம்சனை மனரீதியாக காயப்படுத்தி திடீரென ஒரு வாய்ப்பு கொடுத்து அப்போட்டியில் விளையாடவில்லை என்றால் ஓரங்கட்டிவிடலாம் என பிசிசிஐ நினைக்கிறது. அதனால் தான் நல்லா விளையாடி சதமடித்தபோதும் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் கொடுக்காமல் பாலிடிக்ஸ் செய்கிறார்கள் என ரசிகர்கள் ஆவேசமாக குற்றம்சாட்டியுள்ளனர். 3வது போட்டியிலாவது சாம்சனை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க: IND vs SA டி20: கம்பீர் செய்த பெரிய தப்பு.. இந்த ஃபினிஷரை கண்டிப்பா எடுத்திருக்கனும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









