)
Yograj Singh: 2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்களை அடித்தது.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதுவரை கோப்பையை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த தோல்வி பெரிய எமாற்றமாக இருந்தது. குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை அணிக்கு எதிரான ஒற்றை ஆளாக நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இப்போட்டியில், வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவர் நின்றிருந்தால், கண்டிப்பாக போட்டி பஞ்சாப் கிங்ஸ் பக்கம் திரும்பிருக்கும். ஏனென்றால், அவர் ஆட்டமிழந்த போதிலும் பஞ்சாப் அணி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவியது. இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் சரமாரியாக விளாசி உள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரை கிரிமினல் என சுட்டிக்காட்டி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இந்த இறுதிப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த ஷாட் ஒரு கிரிமினல் குற்றம் என்று நான் நினைக்கிறேன். பிரிவு 302 இன் கீழ் வரும் இந்த கிரிமினல் குற்றத்தைப் பற்றி அசோக் மன்கட் என்னிடம் கூறினார். இதன் விளைவுகள் என்னவென்றால், நீங்கள் இரண்டு போட்டிகளுக்கு தடை செய்யப்படுவீர்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார். நேற்று ஷ்ரேயாஸ் செய்தது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ