இந்திய அணியில் இருந்து கழட்டிவிட்டது குறித்து... சுப்மான் கில் சொல்லிய நச் கருத்து!

Shubman Gill: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து நட்சத்திர வீரர் சுப்மான் கில் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 10, 2026, 04:52 PM IST
  • டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7இல் தொடங்குகிறது.
  • 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
  • சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்திய அணியில் இருந்து கழட்டிவிட்டது குறித்து... சுப்மான் கில் சொல்லிய நச் கருத்து!

Shubman Gill About ICC World Cup 2026: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நாளை தொடங்குகிறது. ஜன. 11, 14, 18 ஆகிய தேதிகளில் முறையே வதோதரா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய நகரங்களில் மூன்று ஓடிஐ போட்டிகள் நடைபெற இருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

அந்த வகையில், ஓடிஐ தொடருக்கு முன்னதாக இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் இன்று (ஜன. 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாதது குறித்த கேள்விக்கு அவர் பதில் அலித்தார். முதல்முறையாக இதுகுறித்து பொதுவெளியில் அவர் பதில் அளித்துள்ளார்.

Shubman Gill: துணை கேப்டனாக இருந்த சுப்மான் கில் 

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரை பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கடந்த 2025ஆம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இருந்து கடந்த மாதம் நடந்த தென்னாப்பிரிக்கா டி20ஐ தொடர் வரை சுப்மான் கில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார், குறிப்பாக துணை கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார்.

Shubman Gill: சுப்மான் கில் நீக்கம் ஏன்? 

ஆனால், தொடர்ச்சியாக இவர் டி20ஐ போட்டிகளில் சொதப்பி வந்த காரணத்தாலும், தேர்வுக்குழு டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பர் விளையாடினால் பினிஷராக ரிங்கு சிங்கை அணிக்குள் கொண்டுவர முடியும் என்பதாலும் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் சஞ்சு சாம்சன் முதன்மையான ஓபனராக செயல்படுவார். அவருக்கு பேக்-அப்பாக இருந்த பினிஷர் ஜித்தேஷ் சர்மா நீக்கப்பட்டு, மற்றொரு ஓப்பனரான இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ரின்கு சிங்கும் தேர்வானார். சுப்மான் கில் இல்லாததால் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக செயலாற்றினார்.

Shubman Gill: மௌனம் கலைத்த சுப்மான் கில்

சுப்மான் கில் தான் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து, "நான் தேர்வுக்குழுவினரின் முடிவை மதிக்கிறேன். ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்" என்றார். மேலும் அவர், "நான் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன். என் தலைவிதியில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை யாராலும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது. ஒரு வீரர் எப்போதும் நாட்டிற்காக தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக விளையாட வேண்டும் என்று நம்புவார், தேர்வுக்குழுவினர் அவர்களின் முடிவை எடுத்துள்ளனர்" என்றார்.

Shubman Gill: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில், இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா உள்ளிட்ட அணிகளும் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் இந்திய அணி மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும். குரூப் சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் - 8 சுற்றுக்கு தகுதிபெறும். அடுத்து இந்த 8 அணிகள் இருப்பிரிவுகாக பிரிக்கப்படும். இதில் ஒரு அணி 3 போட்டிகளில் மோதும். சூப்பர் 8 சுற்றின் முடிவில் அரையிறுதிப் போட்டிகள் நடக்கும். ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 டி20ஐ போட்டிகளில் விளையாட இருக்கின்றன. 

மேலும் படிக்க | IND vs NZ: விராட் கோலி படைக்கப்போகும் 3 சாதனைகள்... அதிலும் 3வது ரொம்ப முக்கியம்!

மேலும் படிக்க | சுப்மான் கில் வேண்டாம்... திலக் வர்மாவுக்கு சரியான மாற்று இவர் தான்... இந்திய அணி பலமாகும்!

மேலும் படிக்க | 'ரோகித் சர்மா தான் கேப்டன்’ ஜெய்ஷா அதிரடி அறிவிப்பு - இந்திய அணியில் டிவிஸ்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News