சுப்மன் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்.. ரிக்கி பாண்டிங்!

Ricky Ponting about gill: சுப்மன் கில் பேட்டிங் சற்று சோம்பேறித்தனம் படுகிறார் என்றும், அவருக்கு மிகப்பெரிய சவால்கள் உள்ளன என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jun 6, 2025, 07:25 PM IST
  • இந்திய பேட்டிங் வரிசையில் மாற்றம் வேண்டும்
  • ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்
சுப்மன் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்.. ரிக்கி பாண்டிங்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்கள் இல்லாததால் இந்த டெஸ்ட் தொடரின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், சுப்மன் கில் பேட்டிங் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசி உள்ளார். அவர் சுப்மன் கில் பேட்டிங்கில் மிகவும் சோம்பேறித்தனம் படுவதாக கூறி உள்ளார். 

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக பேசிய ரிக்கி பாண்டிங், டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுப்பாட்டம் முக்கியமானது. இருப்பினும் சுப்மன் கில்லின் மனநிலை மிகவும் முக்கியம். கில்லின் தடுப்பாட்டத்தில் தொழில்நுட்ப குறை இல்லை. ஆனால் சில சமயங்களில் அவர் தன்னை மிகைப்படுத்தி கொள்கிறார் அல்லது டெஸ்ட் இன்னிங்ஸின் நடுவில் சற்று சோம்பேறித்தனமாகிறார். 

டெஸ்ட்டை பொருத்தவரை ஒவ்வொறு பந்துக்கும் முழு அர்ப்பணிப்பு மிகவும் அவசியமானது. 6 முதல் 7 மணி நேரம் முழு கவனம் தேவை. இதுவே சுப்மன் கில்லின் சவாலாக இருக்கும். பேட்டிங் வரிசையில் அவர் 4வது இடத்தில் இறங்கலாம். தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் இறங்கலாம். 3வது இடத்தில் அனுபவமிக்க வீரராக கே.எல். ராகுல் அல்லது கருண் நாயர் இறங்கலாம். 

கில் 4வது இடத்தில் ஆடலாம். பின்னர் அவர் பழகியவுடன் ஒன் டவுனில் அதாவது 3வது இடத்தில் இறங்கலாம் என ரிக்கி பாண்டிங் கூறினார். தொடர்ந்து சாய் சுதர்சனை பற்றி பேசிய பாண்டிங், சுதர்ஷனுக்கு தற்போது டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத்தால், இந்திய அணி ஒரு மறுசீரமைப்பு நடக்க இருக்கிறது. சாய் சுதர்சன் தயாராக இருக்கிறார். அவர் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளார். தொழில்நுட்ப ரீதியாக சாய் சுதர்சன் சிறப்பாக உள்ளார். மேலும், கே.எல். ராகுல் மிடில் ஆர்டரில் இறங்கினார் இந்திய அணி கூடுதல் பலம் கிடைக்கும் என்றார். 

மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் MVP விருதை வென்ற 5 இந்தியர்கள்!

மேலும் படிங்க: விராட் கோலி கைதா? 11 பேர் உயிரிழந்த விவகாரம்.. ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News